டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு

தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

Oct 17, 2024 - 23:09
Oct 17, 2024 - 23:17
 0
டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு
தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதால் எதுவும் மாறாது - சசிகலா

வடகிழக்கு பருவமழை காரணாமாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலை மட்டுமல்லாது, பல்வேறு இடங்களிலும் முக்கியமாக குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களையும் மற்றும் உணவுப் பொருட்களையும் சசிகலா வழங்கினார். மேலும், அப்பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை சசிகலா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “தற்போது நடைபெற்ற வரக்கூடிய அரசு என்பது மக்களுக்கான அரசா என்ற கேள்வியை தான் எழுப்பி இருக்கிறது. அவர்களுடைய ஆட்சி முறை அப்படி இருக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடிய அரசு, அவர்களுடைய கட்சி சார்ந்த தலைவர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தான் செயல்பட்டு வருகிறது.

தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் மக்களுக்கான நன்மைகளை செய்திருக்கிறோம் என்பதை கூறுகிறார்கள். தவிர, கள நிலவரம் அப்படி அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மழை பெய்து இருக்கிறது. அந்த மழைக் காலங்களில் சென்னை மழை வெள்ளத்தில் எப்படி தத்தளித்தது என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது மழைக்காலங்களில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவறியது திமுக அரசு. சென்னையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பெரிய கால்வாய்களையும், முகத்துவாரங்களையும் முறையாக தூர் வாரி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த மழையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்காது. ஆனால் திமுக அரசு அதை செய்ய தவறிவிட்டது.

சும்மா டீ கடையில் போய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு பேசுவதாலேயோ எதுவும் மாற போறது இல்லை. இதுதான் திமுக வின் உண்மை நிலை பல்லாயிரம் கோடி ரூபாய் சென்னையினுடைய வளர்ச்சிக்காக செலவு செய்து உள்ளோம் என அரசு சொல்கிறது. ஆனால் அப்படி செலவு செய்திருந்தால் ஒரு நாள் மழைக்கு எப்படி சென்னை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

ஏழை மக்களுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாக திமுக அரசு செயல்படவில்லை. 98 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிவு பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார். அப்படி 98 சதவீதம் பணிகள் முடிந்திருந்தால் எப்படி குடியிருப்பு பகுதி மட்டும் அல்லாது, சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கும்?

அமைச்சர்கள் பல நேரங்களில் பொய் சொல்ல தயங்குவதில்லை. சரளமாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் நன்கு எல்லாவற்றையும் அறிந்தவர்கள். மேலும் புத்திசாலிகள் கூட.. ஆதலால் வரக்கூடிய தேர்தலில் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும்.

திமுகவினுடைய குறிக்கோள் என்னவாக இருக்கிறது என்றால் கலைஞர் நூற்றாண்டு விழா என கல்வெட்டுகளை பொறிக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருப்பதாக நான் பார்க்கிறேன். கட்சியில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து 2026இல் அதிமுக ஆட்சியை கொண்டு வருவேன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow