அதிமுகவில் யாரை சேர்க்கணும்? யாரை சேர்க்கக்கூடாதுனு அவர் சொல்லுவார்... முன்னாள் அமைச்சர் தங்கமணி

“கட்சியில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை, தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Nov 17, 2024 - 04:30
 0
அதிமுகவில் யாரை சேர்க்கணும்? யாரை சேர்க்கக்கூடாதுனு அவர் சொல்லுவார்... முன்னாள் அமைச்சர் தங்கமணி
அதிமுகவில் யாரை சேர்க்கணும்? யாரை சேர்க்கக்கூடாதுனு அவர் சொல்லுவார்... முன்னாள் அமைச்சர் தங்கமணி

மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை முடக்குவதாகவும் சாலைகளை சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை தாமதப்படுத்துவதாகவும், கனிம வளம் கடத்தப்படுவதாகவும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “நகை கடன் தள்ளுபடி என கூறினார்கள் ஆனால் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக் கூறினார்கள். 52% மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள்.

இந்த அரசின் இரண்டு சாதனைகளில் ஒன்று கள்ளச்சாராயம். அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் ஒருவர் கூட இறக்கவில்லை. திமுக ஆட்சியில் முதலில் நடைபெற்ற கள்ளச்சாராயம் போது 10லட்சம் கொடுத்துவிட்டு இனிமேல் தமிழகத்தில் ஒரு கள்ளச்சாராய சாவு கூட நடக்காது என்று கூறினார். ஒரு ஆண்டு கழித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே நீதிமன்றத்திற்கு பின்பு 67 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து விட்டார்கள். மற்றொரு சாதனை தமிழகமே போதை பொருளால் மிதந்து கொண்டிருக்கிறது. காவல்துறையால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு 15 வயது மாணவன் கூட போதைக்கு அடிமையாகி காவலரை தாக்கக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கின்றோம்.

1980-ல் நாடாளுமன்ற தேர்தலின் போது இரண்டு தொகுதியில் தான் வெற்றி பெற்றோம். கலைஞர் இந்திரா காந்தியிடம் சொல்லி ஆட்சியை கலைத்தார். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல் என்பது ஒவ்வொரு தொகுதியாக சென்று பிரச்சாரம் செய்தேன் என்று புரட்சித்தலைவர் மக்களிடம் பேசினார். அந்த தேர்தலின் முடிவில் அதற்கு முந்தைய தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றோம். அதே போல வருகின்ற தேர்தலிலும் நடக்கும். 

பாதாள சாக்கடை திட்டங்கள் உட்பட அடிப்படை திட்டங்கள் எதுவுமே செயல்படவில்லை. அதனை உடனடியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். இந்தப் பகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்தும் செயல்படுத்தவில்லை அதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். வெயில் மழை பார்க்காமல் மக்கள் பங்கேற்றுள்ளார்கள். 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக தான் இவ்வளவு மக்கள் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும். அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும். கட்சியில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow