விஜய் அரசியல் வருகை.. இந்தியா கூட்டணிக்கு பாதிப்பா? செல்வப்பெருந்தகை கொடுத்த நச் பதில்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Aug 22, 2024 - 07:00
Aug 22, 2024 - 07:01
 0
விஜய் அரசியல் வருகை.. இந்தியா கூட்டணிக்கு பாதிப்பா? செல்வப்பெருந்தகை கொடுத்த நச் பதில்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கட்சியின் உறுப்பினர்களின் சேர்க்கையை ஆன்லைன் மூலம் தீவிரப்படுத்தினார். 

கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் அதிகமானது. 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை இன்று காலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார். 

இதையோட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும் என்று குறிப்பிடுள்ளார். தமிழ்நாட்டின்‌ நலனுக்காக உழைத்து, நம்‌ மாநிலத்தின்‌ அடையாளமாக நம் கொடி மாறப்‌ போகுது என்றும் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த அரசியல் வருகை, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஆயிரம் ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களிடம் கையேந்தி ஆயிரம் ரூபாய் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் போராட்டம், சென்னை சாஸ்திரி பவன் அலுவலகம் எதிரே உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று நடைபெறும் என்றார். 

மேலும் படிக்க: ‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சனின் மனைவி மறுப்பு

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இன்று தங்கள் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த உள்ள நடிகர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்,  விஜய்யின் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். மேலும்  யுபிசி நேரடி பணி நியமன தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் எதிர்த்ததால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் உள்பட அரசியல் தலைவர்கள் பலர் விஜய்க்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow