தென் ஆப்பிரிக்காவை ‘ஒயிட்-வாஷ்’ செய்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது.

Aug 28, 2024 - 12:51
Aug 29, 2024 - 10:23
 0
தென் ஆப்பிரிக்காவை ‘ஒயிட்-வாஷ்’ செய்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை
3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தன் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதற்கிடையில், மழை குறுக்கிட்டதால், போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 பந்துகளில் [5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 40 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் போட்டிகளில் கூட ஓபனிங் வீரர்கள் அதிரடியாக விளையாடுகையில், தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் மெதுவாக ஆடினார்கள். ரீஷா ஹெண்ட்ரிக்ஸ் 20 பந்துகளில் வெறும் 9 ரன்களையே எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிகெல்டன் 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி முதல் 5 ஓவர்களில் 23 ரன்களையே எடுத்தது. எய்டன் மார்க்ரம் 12 பந்துகளில் [2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி] 20 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெபெர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மழைக் குறுக்கிட்டதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் அலிக் அதன்ஷே 4வது பந்திலேயே, ஒரு ரன் எடுத்து வெளியேறினார். ஆனால், அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் நிகோலஸ் பூரன் வழக்கம்போல் காட்டடி அடித்தார். நிகோலஸ் பூரன் 13 பந்துகளில் [4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்] 35 ரன்கள் குவித்து வெளியேறினார்.

நிகோலஸ் பூரன் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து 20 பந்துகளில் 58 ரன்கள் குவித்து குறிப்பிடத்தக்கது. அவருக்கு பக்கபலமாக இருந்து, ஷாய் ஹோப் 24 பந்துகளில் [4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி] 42 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மயர் 17 பந்துகளில் [4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 31 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 9.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரையும் முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது ரொமாரியோ ஷெபெர்ட்-க்கும், தொடர் நாயகன் விருது ஷாய் ஹோப்-க்கும், வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டிற்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியுள்ள, 10 டி20 போட்டிகளில், 8 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow