This Week OTT Release: மகாராஜா, பகலறியான்... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள், வெப் சீரிஸ்கள்

இந்த வாரம் விஜய் சேதுபதியின் மகாராஜா, வெற்றி நடித்துள்ள பகலறியான் உள்ளிட்ட மேலும் பல படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

Jul 11, 2024 - 21:13
 0
This Week OTT Release: மகாராஜா, பகலறியான்... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள், வெப் சீரிஸ்கள்
July OTT Release

சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தாண்டு தமிழில் வெளியாகும் முதல் ஹைபட்ஜெட் மூவி இதுதான் என்பதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இன்னொருபக்கம் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த மகாராஜா, ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதை தவிர்த்து வேறு எந்த பெரிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியானது மஜாராஜா. ஆனால், அதிரி புதிரி ஹிட் அடித்த மஜாராஜா, பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வரை வசூலித்தது. இதனால் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி மகாராஜா நாளை (ஜூலை 12) முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தியேட்டரை போல ஓடிடியிலும் மகாராஜா மாஸ் காட்டும் என்பது கன்ஃபார்ம்.

தமிழில் பகலறியான் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. வெற்றி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை முருகன் என்பவர் இயக்கியிருந்தார். மே 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான பகலறியான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், பகலறியான் இந்த வாரம் முதல் ஆகா தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தெலுங்கில் ஹரோம் ஹரா, ஆரம்பம், ஜிலேபி ஆகிய படங்கள் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. பிளாட் திரைப்படம் ஈ டிவி வின் என்ற ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. அக்னிசாக்ஷி என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

மலையாளத்தில் மந்தாகினி திரைப்படம் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதன்படி இந்தப் படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தியில் ககுடா (Kakuda) திரைப்படம் ஜீ5 தளத்திலும், Wild Wild Punjab நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், Pill திரைப்படம் ஜியோ சினிமாவிலும் வெளியாகின்றன. அதேபோல் 36 Days என்ற வெப் சீரிஸ் சோனி லிவ் ஓடிடியில் ரிலீஸாகிறது. ஹாலிவுட் ரசிகர்களுக்கு Mean Girls, Divorce In The Black திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகின்றன. 

நெட்பிளிக்ஸில் The Long Game, Kuyang என்ற இந்தோனேஷியன் மூவி, Blame The Game என்ற ஜெர்மன் திரைப்படம், Vanished to The Night என்ற இத்தாலியன் திரைப்படம் ஆகியவை இந்த வாரம் வெளியாகின்றன. அதே தி சாம்பியன் என்ற ஸ்பானிஷ் மூவியும் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow