த.வெ.க மாநாட்டின் போது உயிரிழந்த நபர்கள் – நிதியுதவி வழங்கும் விஜய்
தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.
தவெக மாநாட்டின் போது தொண்டர்கள் பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தொண்டர்கள் சிலர் வெவ்வேறு பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவெக மாநாட்டின் போது உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி வழங்கினார். குடும்ப சூழலைப் பொருத்து சிலருக்கு இரண்டு லட்சம் ரூபாயும், சிலருக்கு ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?