குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.. போரை நிறுத்துங்கள்... இஸ்ரேலுக்கு ஐ.நா. கோரிக்கை
பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இந்த போரால் மத்திய கிழக்கு பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை, உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களால் காஸாவில் குடிநீர், உணவுகள், மருந்துகள் என சுகாதாரக் கட்டமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தோல் தொற்று உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களும், வைரஸ் நோய்களும் தீவிரமாகப் பரவி வருகிறது.
கான் யூனிஸ், டெய்ர் அல்-பாலாவில் ஆகிய பகுதிகளில் ஐ.நா மருத்துவர் குழு தண்ணீரை ஆய்வு செய்ததில் போலியோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு, காசாவில் தோல் மற்றும் வைரஸ் தொற்று நோய்கள் பரவி வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், போலியோ தடுப்பூசி போடத் தயார் நிலையில் இருப்பதாகவும் அதற்கு இஸ்ரேல் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது.
காசாவில் உள்ள 10 வயதிற்குட்பட்ட 6 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு கட்ட போலியோ தடுப்பூசி போடுவதை ஐ.நா. அவை துவங்க உள்ளது. இதற்காக உலக சுகாதார அமைப்பு 16 லட்சம் போலியோ தடுப்பூசியை கொடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த பணிக்கு ஐ.நா. குழந்தைகள் நிதியம், ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவனம், மருத்துவக் குழுக் கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன. எனினும் தடுப்பூசி போடுவதற்கான போக்குவரத்து, மருத்துவர்கள், செவிலி யர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள், ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்பு, எரி பொருள், இணையம் மற்றும் தொலை பேசி சேவைகள் ஐ.நா. பணியாளர் களுக்கான செலவினங்கள் ஆகியவை கேள்விக்குறியாகவே உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?






