மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகள்.. சைவ விருந்து அளித்த விஜய்.. !

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சைவ விருந்து அளிக்கப்பட்டது.

Nov 24, 2024 - 02:11
Nov 24, 2024 - 04:27
 0
மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகள்.. சைவ விருந்து அளித்த விஜய்.. !
மாநாட்டிற்கு இடம் கொடுத்த சைவ விருந்து அளித்த விஜய்.. !

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சென்னை பனையூர் இல்லத்தில் சைவ விருந்து அளிக்கப்பட்டது.

த.வெ.க மாநாட்டில் முதலில் கட்சியின் மாநாடு நடைபெறும் என்று அறிவித்த நாள் முதல் பல்வேறு தடைகள் வந்த வண்ணம் இருந்தது. சேலம், திருச்சி, மதுரை எனத்தொடங்கி பல இடங்களில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாநாட்டிற்கான இடம் தேர்வு பெரிய பிரச்சினையாக அமைந்தது. கடைசியில், விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் மாநாடு நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

தமிழக வெற்றிக் கழகத்தின முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. த.வெ.க மாநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை விஜய் அறிவித்தார். 

த.வெ.க மாநாட்டை நடத்த தமிழக அரசும் பல கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியது. அதனைத்தொடர்ந்து மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் வேலையும் மும்மரமாக நடைபெற்றது.  த.வெ.க மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. 

மாநாட்டிற்காக இடம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளுக்கு மாடு மற்றும் கன்றுகள் வழங்கப்பட்டது. அப்போதே நிலம் கொடுத்தவர்களுக்கு சென்னையில் விருந்தளிக்கப்படும் என்று தகவல் வெளியானது. 

மாநாட்டிற்கு நிலங்களை பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநாட்டிற்காக இடம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று பனையூரில் விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் சைவ விருந்து அளிக்கப்பட்டது. விக்கிரவாண்டி வி.சாலையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் 2 பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு இன்று மதியம் பனையூரில் விஜய் அவரது கையால் விருந்து அளிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், விஜய் பனையூர் இல்லத்திற்கு வருவதற்கு முன்பே விவசாயிகளுக்கு விருந்து பறிமாறப்பட்டது. 

மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அலுவலகத்திற்கு வரும் போது, செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை  என்றும், அவர்கள் வந்த பேருந்திலேயே கைபேசியை வைத்து விட்டு வர சொல்லி கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில்  சாதம், வடை, பாயாசம் , பொறியல், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், அப்பளம் ஆகியவை விருந்தில் இடம்பெற்றுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow