மகா சிவராத்திரி: 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் உருவாகும் பிரமாண்ட சிவலிங்கம்!

திருப்பத்தூரில் மகா சிவராத்திரியை  முன்னிட்டு  7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி அளவிலான பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Feb 25, 2025 - 18:49
 0
மகா சிவராத்திரி: 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் உருவாகும் பிரமாண்ட சிவலிங்கம்!
பிரமாண்ட சிவலிங்கம் அமைக்கும் பணி தீவிரம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வரதன் வட்டம் பகுதியில் ருத்ராட்சலிங்க சுவாமி திருவருளையொட்டி ஒரு லட்சத்திற்கு மேலான ஐந்து முக ருத்ராட்சங்களால் ஆன ஒன்பது அடி உயரம் கொண்ட ருத்ராட்ச லிங்கம் ஆலய திறப்பு விழா கடந்த வருடம் நடைபெற்றது. 

தற்போது அதே இடத்தில் வருகின்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி கொண்ட பிரம்மாண்ட சிவலிங்கம் தயார் செய்யும் வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் நாளை (பிப்.26)  ருத்ராட்சலிங்க ஆலய மகா சிவராத்திரி விழாவும் நடைபெற உள்ளது. 

அன்று காலை 9 மணி முதல் அடுத்த நாள் விடியற்காலை வரை பரதநாட்டியம், நான்கு கால பூஜை அபிஷேக ஆராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற உள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்த கோயிலில் பல்வேறு சிறப்பம்சங்களும் அமைந்துள்ளன.  அதில் தமிழகத்திலே எந்த இடத்திலும் காணாத வகையில் ஐந்து மரங்கள் ஒன்றாக இணைந்து வளர்ந்துள்ளன. 

இந்த மரத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் 27 முறை சுற்றினால் நினைத்த காரியம் நடப்பதாக கூறப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக ருத்ராட்சம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, இங்கு ஆயிரம் கிலோ எடை கொண்ட ருத்ராட்சலிங்கம்,  தண்ணீரில் மிதக்கும் அதிசய கல், ருத்ராட்ச லிங்கத்திற்கு ருத்ராட்சத்தால் பொதுமக்களே பூஜை செய்து வைத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது.

மகா சிவராத்திரி என்பது சிவபெருமானை வணங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிட்ட இந்து பண்டியகையாகும். ’சிவனுக்கான நீண்ட இரவு’ என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையின் போது பல வகையான விரதங்க மற்றும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (பிப். 26) மகா சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது.

சதுர்தசி திதி இன்று காலை 11:08 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 08:54 மணிக்கு முடிவடையும். மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதங்களுக்கு தயாராகி வருகின்றனர். மேலும், இந்தியாவில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow