Actor Bijili Ramesh Viral Video : ”தகுதியை இழந்துட்டேன்..” பிஜிலி ரமேஷ் உதிர்த்த அந்த கடைசி வார்த்தைகள்.. சோகத்தில் இணையவாசிகள்
Actor Bijili Ramesh Viral Video : உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ், உயிரிழப்பதற்கு முன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலங்கடித்து வருகிறது.

Actor Bijili Ramesh Viral Video : பொதுவாக சினிமாவில் வாய்ப்பு கிடப்பது மிக மிகக் கடினம். அதுவும் எங்கோ ஒரு ஓரத்திலாவது வந்துவிடமாட்டோமா, ஒரு சிறிய கதாபாத்திரமாவது கிடைக்காத என காத்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆனால், ஒரே ஒரு பேட்டி மூலம், ஒரே ஒரு வசனம் மூலம் இணையத்தில் வைரலாகி, பிரபலமடைந்தவர் தான் பிஜிலி ரமேஷ்.
பட வாய்ப்புகள்:
பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் சீரீசாக வெளியான பன் பண்றோம் என்ற நிகழ்ச்சி மூலம் அடிக்கடி ஸ்கிரீனில் வந்து மக்களுக்கு பரீட்சயமான முகமாக மாறினார் பிஜிலி ரமேஷ். இதனால் அவருக்கு ரசிகர்களும் குவிந்தனர். இதனையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ படத்தில் நடிக வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, அமலாபால் ஹீரோயினாக நடித்த ‘ஆடை’ திரைப்படத்திலும், ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்திலும் நடித்து வெள்ளித் திரையிலும் ஜொலித்தார் பிஜிலி ரமேஷ்.
இதனையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படத்தில் நடிக்க இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட வாட்ச்மேன் வேடத்தில் அவர் தோன்றியபோது அவருக்கு ரசிகர்களும் சிறந்த வரவேற்பையே அளித்தனர். மேலும், ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ போன்ற திரைப்படங்களில் கமிட்டானார் பிஜிலி.
குறைவான வசங்களையே பேசினாலும், இவரின் தோற்றத்திற்கும், உடல்மொழிக்காகவே இவரை பலரும் ரசித்தனர். இதனால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரை விருந்தினராகவும் அழைந்துள்ளனர். இதனால் இவரால் டீசண்ட்டான வருமான கிடைத்ததாகவே கூறப்படுகிறது
அழிவுப்பாதையில் கூட்டிச்சென்ற குடிபழக்கம்:
பிஜிலி ரமேஷ் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அதிகமாக மது அருந்திவருபவர் என கூறப்படுகிறது. இதனால், நன்றாக சென்றுக்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் உடல்நலக் குறைவு, படவாய்ப்பில் தொய்வு என பல இடிகள் விழுந்தது. இவரது இந்த குடிபழக்கத்தால் கல்லீரல் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் மிகவும் இளைத்து போனார். இவரின் இந்த நிலையை பார்த்து விஜே சித்து உள்ளிட்ட பலர் இவரது மருத்துவ செலவிற்கு உதவினர். இதனால் சற்றே உடல்நலம் தேறிய இவர், வீடு திரும்பினார். ஆனால், இவரது கண்டிஷன் சற்று மோசமாக இருந்ததால் இவரால் முழுமையாக குணமடைய முடியவில்லை, இதனால் இவருக்கு மேலும் நிதியுதவி தேவைப்படுவதாக பல நேர்காணல்களில் இவரது மனைவி பேசியதை நாம் அனைவரும் பார்த்திருக்கக்கூடும்.
இந்நிலையில் திடீரென இவரது உடல்நலம் மீண்டும் மோசமானதால் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இவர் உயிரிழந்த நிலையில், இவரின் ஐகானிக்கான “நீ விக்கிற.. நான் குடிக்கிறேன்..” வசனத்தை பலரும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மரணத்திற்கு முன் உதிர்த்த வார்த்தைகள்:
இந்நிலையில் மரணத்திற்கு முன், பிஜிலி ரமேஷ் பேசிய வார்த்தை தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. வண்டி ஓடும் வரை ஓடும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்த குதிரை எப்போது நிற்கும் என தெரியாது. இனிமேல் அதை பேசி பிரயோஜனம் இல்லை. குடிக்கிறவர்களுக்கு அறிவுறை சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை கிடையாது. அந்த தகுதியை நான் இழந்துவிட்டேன். என் மனைவியும், குழந்தையும் சந்தோஷமாக இருந்தால் சரி”, என அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. 17 நாட்களில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் - முழு விபரம்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இவர் முன்பே இதை யோசித்து குடிபழக்கத்தை கைவிட்டிருந்தால் நன்றாக இருக்கும் என தங்களுடைய வருத்தகளை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?






