Mariyappan Thangavelu : ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா மாரியப்பன்?.. நாளை தொடங்குகிறது பாராலிம்பிக்..

Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Aug 27, 2024 - 10:20
Aug 27, 2024 - 12:20
 0
Mariyappan Thangavelu : ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா மாரியப்பன்?.. நாளை தொடங்குகிறது பாராலிம்பிக்..
Mariyappan Thangavelu in Paris Paralympics 2024

Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : இந்த பாராலிம்பிக் போட்டிகளில் 22 விளையாட்டுகள் நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதில் இருந்து சுமார் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். 38 பேர் கொண்ட பாரா தடகளக் குழு, டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் ஈட்டு எறிதல் சாம்பியனான சுமித் அன்டில் தலைமையில் களமிறங்குகிறது.

டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸில், இந்தியா 19 பதக்கங்களுடன் [5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்] திரும்பியது. பாராலிம்பிக் விளையாட்டுகளில், ஒரு தொடரில் இந்தியா பெற்ற அதிகப்பட்ச பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா மொத்தம் 9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை வென்றுள்ளது. 1984ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் இந்திய வீரர் ஜோகிந்தர் சிங் பேடி, 3 பதங்களை [ஒரு வெள்ளி, 2 வெண்கலம்] வென்றிருந்தார்.

அதேபோல தேவேந்திர ஜஜாரியா, ஏதென்ஸில் நடைபெற்ற 2004 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தையும், 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தையும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில், 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தையும், 2020 டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிகில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

பாராலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்:

வரிசை எண் பெயர் போட்டிகள்
1. மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதல்
2. துளசிமதி முருகேசன் பேட்மிண்டன் (மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர்)
3. மனிஷா ராமதாஸ் பேட்மிண்டன் (மகளிர் ஒற்றையர்)
4. நித்ய ஸ்ரீ சுமதி சிவம் பேட்மிண்டன் (மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர்)
5. சிவராஜன் சோலைமலை பேட்மிண்டன்(ஆடவர் ஒற்றையர், கலப்பு இரட்டையர்) 
6. கஸ்தூரி ராஜாமணி பளுதூக்குதல் (மகளிர் 67 கிலோ எடைப்பிரிவு)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow