சென்னையில் அதிர்ச்சி.. மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி கைது..!
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கணவரை இழந்து இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி கடந்த 17 ஆம் தேதி வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு மதுபோதையில் இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பயத்தில் மூதாட்டி கூச்சலிடவே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சூர்யா என்ற துண்டு பீடி சூர்யா ( வயது 22) என்பவர் மதுபோதையில் வீட்டில் புகுந்து மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெரியவந்தது. மேலும் சூர்யா சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. சூர்யா மீது 7 காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும், குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு மகளிர் போலீசார் தலைமறைவான துண்டு பீடி சூர்யாவை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?