முதலமைச்சர் தைரியம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் உரையை முழுமையாக வெளியிடுவாரா? ஆர். பி. உதயகுமார் சவால்
தைரியம் இருந்தால், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மூன்று மணி நேரம் ஆற்றிய உரையை வெளியிடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு யார்? அந்த சார்? வாகன ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு இருசக்கர வாகனம் ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்களில் யார் அந்த சார் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டினார்.
முன்னதாக மக்களிடம் உரையாற்றிய ஆர் பி உதயகுமார் காட்டாற்று வெள்ளம் போல கிராமங்களில் போதைப்பொருள் நடமாட்டம் புகுந்து விட்டது போதைப்பொருள் சுனாமி தமிழகத்தை சூழ்ந்து இருக்கிறது இந்த சுனாமியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள், இளைஞர்களை காப்பாற்றுங்கள், மாணவர்களை காப்பாற்றுங்கள், எதிர்கால சந்ததிகளை காப்பாற்றுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தி வருகிறார். எதற்காவது நடவடிக்கை எடுத்தாரா? மு க ஸ்டாலின். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
தமிழ்நாட்டு மக்களை காக்க பாலியல் வன்கொடுமையாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதற்கு துறும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. மக்கள் அந்த அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் சட்டமன்றத்தில் எடப்பாடிபழனிச்சாமி 5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறீர்கள். இந்த நான்காண்டுகளில் வருவாய் அதிகரித்து இருக்கிறது ஆனால், மூலதனச் செலவு மட்டும் குறைந்திருக்கிறது என கேள்வி கேட்டால் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வந்த வாழைப்பழ காமெடிபோல் இந்த அரசு பதிலளிப்பதாக கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் நாட்டில் பொழுது விடிந்தால் பொழுது புலர்ந்தால் ஒவ்வொரு நாளும் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறும் வேளையில் அதை தடுத்து நிறுத்த வேண்டிய முதல்வர் அக்கறை செலுத்தாமல் தன்னுடைய பிள்ளைக்கும் பேரன்களுக்கும் பட்டாபிஷேகம் மகுடம் சூட்டி வைக்கிற நிகழ்வில் தான் அக்கறை செலுத்துகிறார் என்பதுதான் இந்த நான்காண்டு காலத்தில் நாம் பார்க்கிற நிலமை இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
ஒட்டு மொத்தமாக தமிழகமே உறைந்து போயிருக்கிறது.மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு இந்த அரசு நீதி வழங்குவதற்கு எந்த அக்கறையும் செலுத்தவில்லை. அதனால் தான் நீதியரசு உள்துறை, காவல்துறையை நம்பாமல் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.அமைதியான சூழ்நிலை இருந்தால்தான் நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்பதற்கு அறிகுறி சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிற போது வளர்ச்சி மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதை சுட்டிக் காட்டினால் அவருடைய உயிரை பறிப்பது என காட்டுமிராண்டித்தனமான செயலாகத்தான் பார்க்கப்படுகிறது.காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத செயலாக தான் உள்ளது.
சம்பவங்களை பார்க்கும் போது இங்கே ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? முதல்வர் என்ற ஒருவர் இருக்கிறாரா? இந்த நாட்டுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் அடிப்படையில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.சட்டமன்றத்தில் நீதி கிடைக்காததால் யார் அந்த சார் என்ற மக்கள் இயக்கத்தை இன்று தொடங்கி கேள்வி எழுப்பி இருக்கிறோம்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் 3 மணி நேரம் மக்களுடைய பிரச்சினைகளை ஆதாரத்துடன் அடுக்கடுக்காக எடுத்துரைத்துபேசினார். ஆனால், அந்த உரையை முழுமையாக ஒளிபரப்பாமல் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியதற்கு டெக்னிக்கல் எரர் என்று கூறிவிட்டார்கள். தெம்பிருந்தால், திராணி இருந்தால் தைரியம் இருந்தால் முதலமைச்சர் நாணயத்தில் எப்படி இரு பக்கமும் சமமாக இருக்கிறதோ அது போல் ஜனநாயகத்தை சமமாக பார்க்க வேண்டும் எதிர்க்கட்சி குரல் வளையை நசுக்கும் முயற்சியில் ஆளும் அரசு உள்ளது. தைரியம் இருந்தால் எடப்பாடி யார் சட்டசபையில் மூன்று மணி நேரம் ஆற்றிய உரையை வெளியிடுங்கள் முதல்வருக்கு இதை சவாலாக கேட்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
What's Your Reaction?