பிக்பாஸ் சீசன் 8.. டைட்டிலுடன் மக்கள் மனதையும் வென்றார் முத்துக்குமரன்...!
கடந்த மூன்று மாதங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக எளிய மக்களின் குரலாக ஒலித்த முத்துகுமரன் வெற்றி பெற்றுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பான போது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனால், அடுத்தடுத்த சீசன்களை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கினர். போட்டியாளர்கள் யார்? என்ன நடக்கிறது? என்பதை சமூகவலைதளங்களில் விவாவதம் நடைபெறும் அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வரவேற்ப்பை பெற்றது. பிக்பாஸ் சீசன் 8-வது சீசனில் பல்வேறு விமர்சனங்களை கடந்து முத்துக்குமரன் டைட்டில் வின்னராகவும் மற்றும் மக்களின் மனதையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் 8-வது சீசனில் இறுதிப் போட்டி ஞாயிறு, 19 ஜனவரி 2025 அன்று சிறப்பாக நிறைவு பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசன், 2024 அக்டோபரில் "ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" தொடங்கியது, உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், வாரந்தோறும் பிரஜைகளின் வாக்குகளின் அடிப்படையில் போட்டியில் வெளியேற்றங்கள் நடைபெற்றன. கடுமையான போட்டிகளுக்கு பிறகு, முத்துக்குமாரன், சௌந்தர்யா, பவித்ரா, விஷால் மற்றும் ரயான் ஆகியோருடன் கிராண்டு இறுதிப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி, விஜய் டிவி சேனல் தலைவர் ஆர். பாலச்சந்திரன் மற்றும் கிளஸ்டர் ஜியோ ஸ்டார் தலைவர் கிருஷ்ணன் குட்டியுடன் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 8 தலைப்பு வெற்றியாளராக முத்துக்குமரனை அறிவித்தார். முத்துக்குமரன் தலைப்புடன் ₹40,50,000 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்று, கோடிக்கணக்கான மக்களின் மனதையும் வென்றார். சௌந்தர்யா இந்த சீசனின் முதல் ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார்.
What's Your Reaction?