Thalapathy 69 : பூஜையுடன் தொடங்கிய தளபதி 69... விஜய், பூஜா ஹெக்டே காம்போ சும்மா அள்ளுதே!
Thalapathy 69 Pooja : விஜய் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் தொடங்கியது. இதில், விஜய், பூஜா ஹெக்டே பாபி தியோல், இயக்குநர் ஹெச் வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.

Thalapathy 69 Pooja : கோட்-ஐ தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் தளபதி 69. H வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இனிமேல் அரசியலில் பயணிக்கவிருப்பதால், தளபதி 69 தான் அவரது கடைசிப் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து விஜய்யே கூறிவிட்டதால், தளபதி 69 படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதனிடையே கடந்த 3 தினங்களாக தளபதி 69(Thalapathy 69) படத்தில் இணைந்துள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்து படக்குழு தரப்பில் அப்டேட் வெளியானது. அதன்படி, இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே விஜய் ஜோடியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்யும் பூஜா ஹெக்டேவும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது மீண்டும் தளபதி 69 படத்தில் இக்கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டேவை தொடர்ந்து பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கெளதம் மேனன், நரேன் ஆகியோரும் தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளனர்.
லியோ, கோட் படங்களைப் போல, தளபதி 69-ம்(Thalapathy 69 Update) தரமான மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் உருவாகவுள்ளது. தமிழில் கங்குவாவை தொடர்ந்து தளபதி 69-ல் நடிக்கும் பாபி தியோல், இந்தப் படத்தில் விஜய்க்கும் வில்லனாக களமிறங்கவுள்ளார். இந்நிலையில், தளபதி 69 படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் கலந்துகொண்டார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், இயக்குநர் H வினோத், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தளபதி 69 பூஜை(Thalapathy 69 Pooja Event) நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், விஜய்யும் பூஜா ஹெக்டேவும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதேபோல், விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மூவரும் ஒன்றாக இருக்கும் போட்டோ, விஜய்யும் இயக்குநர் H வினோத்தும் எடுத்துக்கொண்ட போட்டோ ஆகியவையும் ட்ரெண்டிங்கில் உள்ளன.
தளபதி 69 பூஜையை தொடர்ந்து நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சியை படமாக்க இயக்குநர் H வினோத் முடிவு செய்துள்ளாராம். அதன்பின்னர் அடுத்தக்கட்ட ஷெட்யூல் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது தளபதி 69 பூஜையும் நடைபெற்றுள்ளது விஜய் ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்துள்ளது.
What's Your Reaction?






