Goat Ring : கோட் மோடில் விஜய்... செம மாஸ்ஸாக பஞ்ச் வைத்த தளபதி... வைரலாகும் போட்டோ

Vijay Wearing Goat Ring Photo Viral : விஜய்யின் கோட் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், விஜய் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Oct 4, 2024 - 17:40
Oct 4, 2024 - 22:41
 0
Goat Ring : கோட் மோடில் விஜய்... செம மாஸ்ஸாக பஞ்ச் வைத்த தளபதி... வைரலாகும் போட்டோ
விஜய்யின் GOAT கிளிக்ஸ்

Vijay Wearing Goat Ring Photo Viral : தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா, தளபதி 69(Thalapathy 69) பூஜை என, இன்று ஒரேநாளில் விஜய் ரசிகர்களுக்கு இரண்டு சர்ப்ரைஸ்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம், கடந்த மாதம் 5ம் தேதி ரிலீஸானது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். 

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கோட் படத்துக்கு, முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் கோட் படத்தின் வசூலும் குறைந்தது, ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனது. கோட் படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங் ஆகியவை எதிர்பார்த்தளவில் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், விஜய்யின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். முக்கியமாக விஜய் சீக்கிரமே அரசியலுக்கு செல்லவிருப்பதால், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். அதனால், விஜய்க்காக கோட் படம்(Goat Movie) பார்க்க ரசிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், கோட் திரைப்படம் நேற்று முதல் நெட்பிளிக்ஸ்(Netflix) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான கோட் படத்துக்கு, ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோட் ரிலீஸுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், லியோ பட பாணியில் இசை வெளியீட்டு விழாவை கேன்சல் செய்தார் விஜய். அதேபோல், கோட் படக்குழுவினரின் ப்ரஸ் மீட் நிகழ்ச்சியும் கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது.

இதனால் கோட் ரிலீஸுக்குப் பின்னர் வெற்றி விழா கொண்டாட்டம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆனதால், ரிலீஸுக்குப் பின்னர் சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கோட் படத்துக்கும் அப்படியொரு கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் இல்லாமல் போனது. இந்த நிலையில், கோட் (GOAT) என பொறிக்கப்பட்ட மோதிரம்(Goat Ring) ஒன்றை தனது விரலில் அணிந்தபடி, செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் விஜய். இதனை விஜய் தனது டிவிட்டரில் ஷேர் செய்ய, ரசிகர்கள் அந்தப் போட்டோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

விஜய்யின் இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரம் இந்த போட்டோ தான் கோட் படத்தின் சக்சஸ் மீட்டா(Goat Success Meet) எனவும் ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியுள்ளது. அல்லது கோட் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இதேபோன்ற மோதிரத்தை விஜய் பரிசாக கொடுக்கவுள்ளாரா என்றும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow