Priyanka Mohan: வீடு வரை ஃபாலோ பண்ண ரசிகர்... வார்னிங் கொடுத்த பிரியங்கா மோகன்... இந்த பொழப்புக்கு!
Actress Priyanka Mohan Fan Shocking Video : கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், தனது ரசிகர் ஒருவரை எச்சரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Actress Priyanka Mohan Fan Shocking Video : ஓந்த் கதே ஹெல்லா (Ondh Kathe Hella) என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் ஹீரோயினாக என்ட்ரியானார். முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை கிறங்கடித்த பிரியங்கா மோகன், அடுத்தடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவா ஜோடியாக டான் படத்திலும் நடித்தார். அதன் தொடர்ச்சியாக கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகனுக்கு அதன்பின்னர் ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
தெலுங்கில் நானி ஹீரோவாக நடித்த சரிபோதா சனிவாரம் படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா மோகன், இப்போது டோலிவுட்டிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். பிரியங்கா மோகன் நடித்துள்ள பிரதர் திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளது. ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பிரதர், ஃபேமிலி சென்டிமென்டல் மூவியாக உருவாகியுள்ளது. இந்தப் படம் வெளியான பின்னர் பிரியங்கா மோகன் இன்னும் பிஸியாகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில், கேமியோவாக ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார் பிரியங்கா. இந்நிலையில், ரசிகர் ஒருவரை அவர் எச்சரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரதர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா மோகனிடம், ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வருகிறார். அவரிடம், “இந்த மாதிரி ஃபாலோ பண்ணி வர்றதெல்லாம் பண்ணாதீங்க, அது என் ஃபிரண்ட் வீடு” எச்சரித்துவிட்டு, சிரித்தபடி செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார்.
அந்த ரசிகர் அங்கிருந்து சென்ற பின்னர், தனது அருகில் இருந்தவரிடம் “நேற்று அந்த பையன் வீடு வர என்னை ஃபாலோ பண்ணிட்டே வந்தான், சொன்னாலும் கேட்கவில்லை” என்பதாக அதிர்ச்சியோடு நடந்த சம்பவத்தை கூறுகிறார். பிரியங்கா மோகன்(Priyanka Mohan) தனது ரசிகரை வார்னிங் செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த ரசிகருக்கு அறிவே இல்லையா, இது என்னடா பொழப்பு, பிரியங்கா மோகன் இவ்வளவு திட்டியும் அவருடன் செல்ஃபி எடுக்கலாமா..? கேள்வி மேல் கேள்வி கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஹீரோ, ஹீரோயின் உட்பட திரை பிரபலங்களுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுப்பதற்காக ரொம்பவே எல்லை மீறுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது. அப்போதும் கூட அவரது நிலைமையை புரிந்துகொள்ளாமல் ரசிகர்கள் செல்ஃபியும் வீடியோயும் எடுக்க போட்டிப் போட்டனர். நடிகர்களை விட நடிகைகள் நிலை இன்னும் மோசம் எனலாம். அதனால் பிரியங்கா மோகன் ரசிகரை வார்னிங் செய்ததில் தவறு இல்லை என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?