மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூரம்.. கொலை வழக்கில் மூன்று பேர் கைது..
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சாலையோரத்தில் வீசிவிட்டு மனைவியை காணவில்லை என்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சாலையோரத்தில் வீசிவிட்டு மனைவியை காணவில்லை என்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கோபுரத்தெருவை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ டிரைவர் கோபி. இவருக்கு முன்னதாக ஒரு திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அரசுடையான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன், காவிரி தம்பதிகளின் மகளான சரண்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். கோபிநாத், சரண்யா தம்பதிகளுக்கு 7-வது படிக்கும் ஏமபிரியா, 6-வது படிக்கும் சக்திவேல், 4-வது படிக்கும் வெற்றிவேல் ஆகிய மூன்று பிள்ளைகள் இவர்களுக்கு உள்ளனர்.
சமீப காலமாக கோபிக்கும், சரண்யாவிற்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது. கோபிக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் சரண்யாவை பலரிடம் கடன் கேட்கவைத்துள்ளார். கடன் கொடுத்தவர்களிடம் சரண்யாவை பேச சொல்வதால், இதுவே நாளுக்கு நாள் இவர்களுக்கு சண்டை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்படும் தகராறு சரண்யா தாய் வீட்டுக்கு சென்று கூறியதை தொடர்ந்து சரண்யாவின் தாய் காவேரி வீட்டு வேலை செய்து மருமகன் பட்ட கடனை அடைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
தீபாவளிக்கு முன்னதாக சரண்யா தனது மூன்று பிள்ளைகளோடு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டு பட்டாசுகளை வாங்கிக் கொண்டு, அம்மா கொடுத்த காசையும் மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்தது மட்டுமே தெரியும், அதன் பிறகு கணவர் வீட்டுக்கு சென்ற சரண்யா பற்றிய எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார். அன்றைய தினம் இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாக்குவாதம் முற்றிய நிலையில் சரண்யாவை கோபி கொலை செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சரண்யாவின் மாமியார் போலீஸில் தனது மருமகள் காணவில்லை என்று புகார் கொடுத்ததாகவும், புகாரியின் அடிப்படையில் சனிக்கிழமை அதிகாலை நகர காவல் நிலைய போலீசார் சரண்யாவின் அம்மா வீட்டிற்கு சென்று அண்ணன் அபிநேஷிடம் விசாரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் சரண்யா கிருஷ்ணகிரி அருகில் சூளகிரி என்ற கிராமத்தின் அருகில் சாலையோரத்தில் சரண்யாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் கவரில் பொட்டலமாக கிடந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
போலீசாரின் தொடர் விசாரணையில் சரண்யா அரசுடையான்பட்டுக்கு வரவே இல்லை என தெரியவந்த நிலையில், கோபி மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை விசாரிக்க சென்றபோது அவர், தலைமறைவானது தெரியவந்தது. கோபியின் தாயார் சிவகாமியிடம் போலீஸார் விசாரித்தபோது கோபிநாத் அவரது நண்பருடன் சேர்ந்து சரண்யாவை கொலை செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சாலையில் போட்டது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கோபியை கைது செய்து சூளகிரி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று சரண்யாவின் உடல் பாகங்களை மீட்டுள்ளனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த கோபியின் தாய் சிவகாமி (56) மற்றும் திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகனான கார் ஓட்டுநர் விஜயராகவன் (45) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்த்னர்.
பெற்றோர்களின் பிரச்சனையால், தற்போது 3 குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?