பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்றும், அதனை தடுத்து காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் இருந்து இதுகுறித்து எந்த முன்மொழிவும் வரவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார். இந்த சட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கின்ற நிலையில் கூடுதலாக சூழலியல் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற வேண்டிய அவசியம் இல்லை.
உண்மை நிலை இவ்வாறு இருக்க அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் குறித்த முன் முடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை என திமுக தரப்பில் பொய் பிரச்சாரம்
மேற் கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
கடந்த 2010 இல் மத்திய அமைச்சராக இருந்த டி ஆர் பாலு, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தது திமுக என பெருமிதத்துடன் சொன்னார். ஆனால், டெல்டா மாவட்டங்களை பாலைவணமாக்கும் திட்டத்துக்கு துணை போனவர் அன்று அமைச்சராக இருந்தது ஸ்டாலின் தான்.
வேளாண் துறை மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
உண்மை இவ்வாறு இருக்க மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசுதா பாராளுமன்றத்தில் மயிலாடுதுறை,தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மத் திய அரசு அளித்த பதிலை திமுக தவறாக பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர்
விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற குறை கூறிய ஜெயக்குமார். தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தால்தான் கடந்த 5 ஆண்டுகளில் புதிய கிணறுகள் டெல்டா மாவட்டங்களில் வரவில்லை என்றும் கூறினார். இதற்கு ஒன்றிய அரசின் பதில்தான் சாட்சி. ஆனால், இந்தச் சட்டம் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த கிணறுகளைக் கட்டுப்படுத்தாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
What's Your Reaction?