பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளிவந்த உண்மை.. குற்றவாளி கைது ..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dec 25, 2024 - 19:33
Dec 25, 2024 - 20:07
 0
பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு..  வெளிவந்த உண்மை.. குற்றவாளி கைது ..!
பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளிவந்த உண்மை.. குற்றவாளி கைது ..!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை சார்பில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூபுரத்தை சேர்ந்த ஞானசேகரன். (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஞானசேகர் என்பவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில், உள்ள நிலையில், குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா..? என்ற கோணத்தில் விசாரணை செய்தனர்.  

கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளி ஞானசேகர் மீது 10 க்கு மேல் வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து, தினமும் 7 மணிக்கு மேல் அண்ணா பல்கலைக்கழக  வளாகத்திற்குள் சென்று இதே வேலையில் ஈடுபட்டுள்ளார். பல வீடியோக்கள் செல்போனில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

சம்பவத்தன்று (23 ம் தேதி) பிரியாணி கடையில் விற்பனை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்றதும், அங்கு தனிமையில் இருந்த காதலர்களை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்ததும் பின்பு அந்த பதிவை காட்டி மிரட்டி  சமூக வலைத்தளங்களில் போட்டு விடுவதாக கூறி மிரட்டி பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 23ஆம் தேதி தனிநபராக சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow