பாலியல் வன்கொடுமை விவகாரம்.. விளக்கம் அளித்துள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம்..!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது.
மாணவி பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினரின் விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக உள் புகார்க் குழுவினரும் மாணவியின் பாலியல் புகார் குறித்து விசாரித்து வருகிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தினைப் பொறுத்தவரை முதன்மையான அனைத்து மாணவர்களின் முன்னுரிமையாக தெரிவித்துக்கொள்கிறோம். குற்றவாளிகளை பாதுகாப்பு எப்போதுமே உள்ளது என்பதை விரைவில் கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?