தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது.... அண்ணாமலை பதிலடி!

தவழந்து காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்தவர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Aug 25, 2024 - 21:18
Aug 26, 2024 - 09:50
 0
தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது.... அண்ணாமலை பதிலடி!
எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்ணாமலை பதிலடி

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலைக்கு மைக்கை பார்த்தாலே பேட்டி கொடுக்கும் வியாதி இருக்கிறது. எலாருமே உழைத்து தலைவர் ஆனார்கள். ஆனால் உழைக்காமலே ஒரு கட்சிக்கு தலைவர் ஆனவர் அண்ணாமலைதான். பாஜகவுக்காத இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? எதோ ஒரு வழியில் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டு அதை வைத்துக்கொண்டு இன்று தலை கால் புரியாமல் ஆடுகிறார். நாங்கள் எல்லாம் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இந்த கட்சிக்குள் வந்து உழைத்து இந்த இடத்தில் இருக்கிறோம். 52 ஆண்டு காலம் உழைப்புக்கு பிறகுதான் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆகி இருக்கிறேன். மக்களைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலைதான். அவருக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்” என விமர்சித்துள்ளார். 

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில் "தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது இதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இதுவெறும் முருகன் மாநாடு மட்டுமல்ல தமிழ் பண்பாடும் கலந்து கொண்டுள்ள விழா என்று உதயநிதி கூறுகிறார். பெரியார் பெரியார் என்று கூறினார்கள் நடந்து கொண்டிருப்பது பெரியாருடைய ஆட்சி என்று கூறினார்கள். ஆனால் தமிழ் பண்பாடை பற்றி பெரியார் என்ன கூறினார் என்று உங்களுக்கு தெரியும். திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பரை பற்றி பெரியார்  என்ன கூறினார் என்று உங்களுக்கு தெரியும்” என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “யாரையோ பிடித்து பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் தவறாக போய்விடும். இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். சிலுவம்பாளையத்தில் பங்காளி சண்டையில் சிறைக்குச் சென்றவர் நீங்கள். இப்ப இருக்கும் மூத்த அமைச்சர் ஒருவரது உதவியுடன் வெளியே வந்தீர்கள் அதனால் இதெல்லாம் நீங்கள் பேசக்கூடாது. தவழந்து  காலில் விழுந்து ஆட்சியைப் பிடிச்சு மாத மாதம் எம்எல்ஏக்கு பணம் கொடுத்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களே... தயவுசெய்து  மானமுள்ள ஒரு விவசாயி மகன் அண்ணாமலைக்கு நீங்கள் பாடம் எடுக்க வர வேண்டாம்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: 'திமுகவில் கலவரம் வெடிக்கும் என்று ரஜினியே கூறி விட்டார்'.. கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

மேலும், “எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் கட்சிக்கு வந்தேன். எந்த பொறுப்பையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு வந்தேன். இது அனைத்தும் தற்குறி எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது. எடப்பாடி பழனிச்சாமி தனது சம்மந்தி மூலமாக கொள்ளை அடித்து பீகார் மற்றும் மற்ற மாநிலங்களில் வைத்துள்ளார். மத்தியில் பாஜக தலைவர்கள் எல்லோரும் இங்கிருக்கும் தொண்டர்களை கேட்டு தான் முடிவு எடுக்கிறார்கள். எப்பொழுதும் பாஜகவிற்கும் திமுகவிற்கும் தமிழகத்தில் உறவு இருக்காது. இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை. பாஜக அனைவருக்கும் அங்கீகாரம் கொடுக்கும். அதற்கான தைரியமும் உழைப்பும் வேண்டும். 1,12,000 இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தொண்டர்கள் நிற்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக களத்தில் இருக்க வேண்டும். இரண்டு கட்சிகளுக்கும் மாற்று நாம்தான் என்று சொல்ல வேண்டும். திமுக அதிமுக எதிர்ப்பை சரியாகப் புரிந்து கொண்டு அந்த எதிர்ப்பை களத்தில் காட்ட வேண்டும்” என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow