Rajinikanth : அப்பல்லோவில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த்... இப்போ எப்படி இருக்கார்ன்னு தெரியுமா..?
Rajinikanth Health Update : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
Rajinikanth Health Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, 3 தினங்களுக்கு முன்னர் (செப்.30) அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கூலி படப்பிடிப்பில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய பின்னர், ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அவருக்கு வயிறு வலி இருந்ததோடு, ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தியிருந்தது. மேலும் ரஜினிக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கம் கொடுத்திருந்தது.
அதேநேரம் ரஜினிகாந்துக்கு இருதயவியல் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். அதில் ரஜினிக்கு ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால், அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டென்ட் (Stent) மட்டும் பொருத்தினர் மருத்துவர்கள். இதனையடுத்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, தற்போது வீடு திரும்பியுள்ளார். யாருடைய உதவியும் இன்றி அவரே நடந்து சென்று காரில் ஏறி பயணித்தார். இதனால் ரஜினியின் உடல்நிலையில் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிகிறது. ரஜினியின் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த வாரம் 10ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த ரஜினி, மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். அதேபோல், தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி ஒன்றும் சொல்ல, அதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வேட்டையனை விடவும் ரஜினி நடித்து வரும் கூலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் கூலி படத்தில், ரஜினியுடன் நாகர்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகின்றனர். அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் இந்தப் படத்தில் கேமியோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூலி படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் உடல்நிலை பாதிப்பு படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உடல்நிலை முழுமையாக சாரியான பின்னர் தான், ரஜினிகாந்த் மீண்டும் கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு இதுகுறித்து அப்டேட் ஏதும் வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?