Iran-Israel War : இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம்... திடீரென குண்டைத் தூக்கி போட்ட பைடன்!
Joe Biden About Iran-Israel War : ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
Joe Biden About Iran-Israel War : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை(Israel Attack) நிறுத்த மறுத்து வருகிறது.
போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம்(Israel Army) மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான ஈரான் தற்போது இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபானான் மீதும் ஹிஸ்புல்லாக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் வெகுண்டு எழுந்துள்ளது.
அதன்படி கடந்த அக். 1ம் தேதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்(Joe Biden), இஸ்ரேலுக்கு என்றும் துணை நிற்பதாகத் தெரிவித்தார். இதனை சிறிதும் எதிர்பாராத இஸ்ரேல் ராணுவம் ஸ்தம்பித்து போனது. இதற்கு பதில் தாக்குதலாக லெபனான் மட்டுமின்றி சிரியாவையும் தரைவழியாகத் தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள்(Iran Nuclear Weapons Site) மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: “அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா..?” தவெக தோழர்களுக்கு விஜய் வெளியிட்ட அறிக்கை!
முன்னதாக இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன்(Joe Biden) "இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளதாகவும், அதே சமயம் ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது" எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே இஸ்ரேலுடன் போர் நடத்த முயற்சிக்கவில்லை என்றும், இஸ்ரேல் புதிதாக தாக்குதல் நடத்தினால் 'வழக்கத்திற்கு மாறான பதிலடி' கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?