Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ட்ரெய்லர் பராக்... தலைவர் குறி வச்ச மாதிரி... இரை விழுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Sep 30, 2024 - 17:27
 0
Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ட்ரெய்லர் பராக்... தலைவர் குறி வச்ச மாதிரி... இரை விழுமா..?
வேட்டையன் ட்ரெய்லர் அப்டேட்

சென்னை: ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ‘ஜெய்பீம்’ புகழ் தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி என பான் இந்தியா நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். அதேபோல், கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் வேட்டையன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்துக்குப் பின்னர் ரஜினி போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளது வேட்டையனில் தான். இதனால் இப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஆக்ஷன் ட்ரீட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது வேட்டையன் படத்தின் ப்ரிவியூவை படக்குழு வெளியிட்டது. 

அதன் தொடர்ச்சியாக தற்போது வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வேட்டையன் ட்ரெய்லர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ளது. வேட்டையன் ப்ரிவியூ வீடியோவில் அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ்ராஜ் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தது ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் ஆனது. அமிதாப் பச்சன் நடித்திருந்தும் அவருக்கு பிரகாஷ்ராஜ் டப்பிங் கொடுத்துள்ளது ரியலாக இல்லை எனவும், ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதனால் அமிதாப் பச்சன் கேரக்டருக்கு தற்போது ஏஐ மூலம் டப்பிங் கொடுத்துள்ளனர். 

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி சிங்கிளாக வெளியாகவுள்ளது. முன்னதாக இதே தேதியில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சூப்பர் ஸ்டாருக்காக தனது கங்குவா ரிலீஸ் தேதியை மாற்றி வைப்பதாக சூர்யா கூறியிருந்தார். இதனால் சிங்கிளாக ரிலீஸாகும் வேட்டையன், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow