பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்த இலங்கை அணி.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து பரிதாபம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

Sep 29, 2024 - 14:41
Sep 29, 2024 - 17:51
 0
பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்த இலங்கை அணி.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து பரிதாபம்
15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. கமிந்து மெண்டிஸ் 182 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, அதிவேகமாக 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், தினேஷ் சண்டிமால் 116 ரன்களும், குஷல் மெண்டிஸ் 106 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 88 ரன்களுக்குள் சுருண்டு அதிர்ச்சி அளித்தது. மிட்செல் சாண்ட்னர் எடுத்த 29 ரன்களே அதிகப்பட்சமாகு. இன்னும் சொல்லப்போனால், 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 514 ரன்கள் பின் தங்கிய நிலையில், பாலோ-ஆன் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 360 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை தரப்பில் நிஷன் பெரிஸ் 6 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஒரு காலத்தில் இலங்கை அணியில் ஜெயசூர்யா, சங்ககாரா, தில்ஷன், ஜெயவர்த்தனா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ரணதுங்கா, அட்டப்பட்டு, உபுல் தரங்கா, மலிங்கா, அஜந்தா மெண்டிஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது. மேலும், இவர்கள் ஏதோ ஒருவகையில் எதிரணிக்கு அச்சத்தை கொடுத்தனர். ஆனால், சில காலமாக இலங்கை அணி கத்துக்குட்டி அணிபோல் செயலபட்டு வந்தது.

தற்போது, இளம் வீரர்களின் அபார ஆட்டத்தில் மீண்டும் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அணி. அந்த வகையில், நியூசிலாந்து அணி எதிரான டெஸ்ட் தொடரை 15 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக 2009ஆம் ஆண்டும் இலங்கை அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow