திமுக நிர்வாகி செல்போன் மூலம் ஆபாச படம்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Nov 10, 2024 - 20:15
Nov 10, 2024 - 20:21
 0
திமுக நிர்வாகி செல்போன் மூலம் ஆபாச படம்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது
ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைதான சாப்ட்வேர் இன்ஜினியர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சின்னா (43) திமுக திண்டுக்கல் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, சின்னாவின் செல்போனில் இருந்து ஆபாச படங்கள் வந்துள்ளது.

இதனை அடுத்து அந்தப் பெண் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக திமுக நிர்வாகி சின்னா டெல்லி போலீஸ்ரால் விசாரணை செய்யப்பட்டார்.

இந்த விசாரணையில் ஏற்கனவே தொலைந்துபோன தனது சிம் கார்டை பயன்படுத்தி, தொடர்சியாக ஆபாசங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தனது சிம் கார்டை பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சின்னா டெல்லி காவல் நிலையத்திலும் வத்தலகுண்டு காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வத்தலகுண்டு அடுத்துள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஹரி பிரதீப் என்பவர் சின்னாவின் சிம் கார்டை பயன்படுத்தி ஆபாச படங்களை அனுப்பி இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் டெல்லி போலீசார் ஹரி பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனையடைத்து ஹரி பிரதீப் தலைமறைவானார்.

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பதுங்கி இருந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஹரி பிரதீப்பை (34) வத்தலகுண்டு மற்றும் டெல்லி போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஹரி பிரதீப்பை  டெல்லி போலீஸ் விசாரணைக்கு டெல்லி அழைத்துச் சென்றனர்.

ஆபாச படம் அனுப்பிய விவகாரத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow