குளிர் காலத்துல சருமம் வறண்டு போச்சா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
Skin Care Tips in Tamil : குளிர் காலத்தில் உங்கள் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
Skin Care Tips in Tamil : வெயில் காலங்களைப் போலவே குளிர் காலங்களிலும் சருமத்திற்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும். வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மை அதிகமாக இருக்கும். ஆனால் பனிக்காலத்தில்(Monsoon Season) அதற்கு அப்படியே நேர்மாறாக சருமம் வறண்ட பாலைவனம் போல் தோற்றமளிக்கும். அதை அப்படியே விட்டுவிட்டால் சரும வெடிப்பு, தோல் உறிதல், உதடு வெடிப்பு, சரும டல்னஸ், pigmentation உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகலாம். இதிலிருந்து உங்கள் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
டீப் கிளீன்:
குளிர் காலத்தில் சருமம்(Skin) எளிதாக வறண்டு விடும் என்பதால், முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் முற்றிலும் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சோப் உபயோகிப்பதற்கு பதிலாக மிகவும் mild ஆன ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவலாம். Salicylic acid அடங்கிய ஃபேஸ் வாஷ் உபயோகித்தால் உங்களது முகத்தின் PH அளவு balanced ஆக இருப்பதோடு முகம் வறண்டு போகாமலும் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாய்ஸ்சரைசர்:
குளிர் காலங்களில் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் மிக மிக மிக அவசியமான ஒன்று. முகத்தை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு மாய்ஸ்சரைசர் முக்கிய பங்காற்றுகிறது. hyaluronic acid, glycerin மற்றும் ceramides அடங்கிய மாய்ஸ்சரைசர்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது. குளிர் காலம்தானே என்று ஹெவியான கிரீம்களை உபயோகித்தால் சரும துவாரங்கள் அடைபட்டு முகப்பருக்கள் உண்டாகின்ற வாய்ப்புகளும் உண்டு. எனவே லைட் வெயிட் மற்றும் gel போன்ற கிரீம்கள் உபயோகிப்பது சிறந்தது.
ஃபேஸ் பேக்:
அதிகப்படியான குளிர் சருமத்தை dull ஆக்குவதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் அளிக்கும். இதற்கு வாரம் ஒரு முறை தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் போடுவது சிறந்தது. 2 ஸ்பூன் தயிருடன் அரை ஸ்பூன் மஞ்சளை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் செய்துகொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். அதன் பின்பு வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை கழுவி விடவும். தயிரில் உள்ள ஃபோலிக் அமிலமும் மஞ்சளில் உள்ள anti inflammatory தன்மைகளும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உள்ளிருந்து பொலிவூட்டுகிறது.
டோனர்:
குளிர் காலங்களிலும் டோனர் உபயோகிப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. சருமத்திற்கு ஏற்ற எளிமையன சூப்பரான டோனரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு வெள்ளரிக்காயை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு சாறு பிழிந்துகொள்ள வேண்டும். இதனுடன் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிதளவு கிளிசரின் சேர்த்து கலந்துகொள்ளவும். அவ்வளவுதான்! ஹோம் மேட் நேச்சுரல் டோனர் ரெடி! இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி fridge-ல் ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம். காலை மற்றும் இரவு முகம் கழுவிய பின்பு இந்த டோனரை முகத்தில் ஸ்பிரே செய்து வந்தால் முகம் புத்துணர்ச்சியுடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.
இரவு நேரத்தில் ரெட்டினால்:
சிலருக்கு குளிர் காலத்திலும் முகத்தில் அதிகப்படியாக எண்ணெய் சுரக்கும். இதைக் கட்டுப்படுத்த இரவு நேரத்தில் ரெட்டினால் அடங்கிய கிரீம்கள் அல்லது சீரம்களை உபயோகிக்கலாம். ரெட்டினால் முகத் துவாரங்களை சுத்தப்படுத்துவதோடு, சருமத்தில் கொல்லாஜன் அளவை அதிகப்படுத்துகிறது. நமது தோல் நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்க கொல்லாஜன் மிகவும் அத்தியாவசியமானது. இதுமட்டுமில்லாமல் முகம் எப்போதும் பொலிவாக இருக்கவும் போடாக்ஸ் செய்தது போல் plump ஆக இருக்கவும் ரெட்டினால் உதவுகிறது. ஆனால் இதை உபயோகிக்கும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
What's Your Reaction?