அனைத்திற்கும் என் கணவர் தான் காரணம்.. உண்மையை உடைத்த பாடகி

இன்று நான் உயிரோடு திரும்பி வந்து உங்களிடம் பேசுவதற்கு என் கணவர் தான் காரணம் என்று பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Mar 7, 2025 - 14:01
 0
அனைத்திற்கும் என் கணவர் தான் காரணம்.. உண்மையை உடைத்த பாடகி
கல்பனா ராகவேந்தர்

Singer kalpana raghavendar issue: பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இவர் வீட்டில் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீடு திறக்கப்படாமல் பூட்டி இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது வீட்டு காவலாளி அங்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதையைடுத்து அவர்கள் கல்பனா வீட்டிற்க்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அப்போது எந்த பதிலும் கல்பனாவிடம் இருந்து வராததால் சந்தேகமடைந்து சென்னையில் உள்ள அவரது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரும் கல்பனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தகவலறிந்த நிஜாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர்.

எந்த பயனும் இல்லாததால் கல்பனாவுக்கு போன் செய்துள்ளனர். அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில்  பின்பக்கமாக உள்ள கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது கல்பனா சுயநினைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

அவருக்கு அருகே தூக்க மாத்திரை இருந்துள்ளது. தொடர்ந்து, ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று பாடகி கல்பனா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " என்னை பற்றியும் என் கணவர் பற்றியும் மீடியாவில் ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. மன உளைச்சலால் எனக்கு பல வருடங்களாக சரியான தூக்கம் இல்லாமல் இருந்தது. இதற்காக நான் மருத்துவரை அணுகிய போது அவர்கள் அந்த மாத்திரைகளை பரிந்துரைத்தனர். 

குறிப்பிட்ட அந்த நாளில் அந்த மாத்திரையை அதிகம் எடுத்ததால் எனக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். ஆனால், இன்று நான் உயிரோடு திரும்பி வந்து உங்களிடம் பேசுவதற்கு என் கணவர் தான் காரணம். எந்த வதந்திகளையும் தயவு செய்து நம்பவேண்டாம். என் குடும்பத்தில் எந்த பிரச்சனைகளும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow