இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mar 5, 2025 - 08:00
Mar 7, 2025 - 07:26
 0
இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்
கல்பனா ராகவேந்தர்

Singer Kalpana Raghavendar Hospitalised : பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் சிறு வயது முதலே பாட்டு பாடி வருகிறார். இவரது தந்தை டி.எஸ். ராகவேந்திரா, நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் நடித்திருந்த ’வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்தது.

தொடர்ந்து, சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்,  புஷ்பாஞ்சலி, ஆனந்தபவன், கோலங்கள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட சீரியல்களிலும் டி.எஸ். ராகவேந்திரா நடித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக இவர் காலமானார். பாடகி கல்பனாவின் தாயார் சுலோச்சனாவும் ஏராளமான படங்களில் பாடியுள்ளார்.

இசைக் குடும்பத்தைச் சேர்ந்த பாடகி கல்பனா 'போடா போடா புண்ணாக்கு’, ’திருப்பாச்சி அருவாள்’ உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். ’புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ள இவர் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா உள்ளிட்ட பல ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 

தற்கொலை முயற்சி

ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாடகி கல்பனா(Singer Kalpana) தங்கியிருந்தார். இவர் வீட்டில் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீடு திறக்கப்படாமல் பூட்டி இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது வீட்டு காவலாளி அங்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். இதையைடுத்து அவர்கள் கல்பனா வீட்டிற்க்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

அப்போது எந்த பதிலும் கல்பனாவிடம் இருந்து வராததால் சந்தேகமடைந்து சென்னையில் உள்ள அவரது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரும் கல்பனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தகவலறிந்த நிஜாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர்.

எந்த பயனும் இல்லாததால் கல்பனாவுக்கு போன் செய்துள்ளனர். அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில்  பின்பக்கமாக உள்ள கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது கல்பனா சுயநினைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவருக்கு அருகே தூக்க மாத்திரை இருந்துள்ளது. தொடர்ந்து, ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கல்பனா விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow