அங்காடி மையம் புதுப்பிப்பு.. குழந்தைகளுக்கு சீர்வரிசை !
பல வருடங்களாக சிலதமடைந்து கிடந்த அங்காடி மையத்தை புதுப்பித்து சீர்வரிசையாக, குழந்தைகளுக்கு உபகரணங்கள் கொண்டு கட்டிடத்தை பொதுமக்களுடன் இணைந்து காவலர்கள் திறந்து வைத்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் கடந்த 1982 -ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் இந்த அங்கன்வாடி மையத்தில் தற்போது 20 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கன்வாடி மையமானது பல வருடங்கள் சிதலமடைந்து இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து. இதனால் அங்கன்வாடி மையத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் கடையநல்லூர் காவல்துறையினரும் மற்றும் சமூக ஆர்வலர்களும் இணைந்து இந்த சிதலமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைத்து கலர்வர்ணம் பூசப்பட்டு புதிய கட்டிடம் போல் கட்சியளித்தது.
இந்நிலையில் இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் இன்று திறக்கப்பட் இருந்ததை தொடர்ந்து குழந்தைகளுக்கு தேவையான புத்தகம், நோட், பேக், சேர், விளையாட்டி உபகர்ணங்களை உள்ளிட்ட பொருட்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சிரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை காவல்துறையினர் மற்றும் நகர்மன்ற தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களும் இணைந்து கட்டிடத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான உபகர்ணங்களை வழங்கினர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த அங்கன்வாடி மையத்தின் உள்ளே உள்ள மேற்கூரை பெயர்ந்தும் சுவற்றில் அங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதே போன்று மையத்தின் உள்ளே மின்மோட்டார் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னரே நகராட்சி நிர்வாகம் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?






