Thalapathy Vijays JanaNayagan: விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகிறது- அப்டேட் கொடுத்த படக்குழு
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் , பாபி தியோல், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் இதுவே அவரின் கடைசி திரைப்படம் என்றும் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என கூறியுள்ளார். அதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடயே எகிறியுள்ளது.
பொங்கலுக்கு வருகிறது ஜனநாயகன்
2026 தேர்தலுக்கு முந்தைய படம் என்பதால் இப்படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை எடுத்துரைக்கும் வகையில் படத்தின் தலைப்பே இது ஒரு அரசியல் படம் என்பதைப் புரிய வைப்பதை போன்று உள்ளதாக கருத்துகள் சொல்லப்படுகிறது. ஆனால் இது அரசியல் படம் இல்லை என்றும் அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் எச்.வினோத் விழா ஒன்றில் தெரிவித்திருந்தார். அதே சமயம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் தழுவல்தான் இந்தப் படம் என்ற தகவலும் உள்ளது. அப்படத்தின் ரீமேக் உரிமையையும் தயாரிப்பாளர் வாங்கிவிட்டார்.
Read more: ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இதனிடையே, இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தவெகவினர், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
What's Your Reaction?






