Special Classல் பாலியல் சீண்டல்? துடித்துபோன மாணவன்.. கொடூர ஆசிரியரின் கோர முகம்!

சிறப்பு வகுப்பில் மாணவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவருக்கு நேர்ந்தது என்ன? பள்ளி நிர்வாகம் செய்தது என்ன? விசாரணையில் வெளியானது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Mar 4, 2025 - 15:34
Mar 4, 2025 - 16:30
 0
Special Classல் பாலியல் சீண்டல்? துடித்துபோன மாணவன்..   கொடூர ஆசிரியரின் கோர முகம்!
Special Classல் பாலியல் சீண்டல்? துடித்துபோன மாணவன்.. கொடூர ஆசிரியரின் கோர முகம்!

தென்காசி மாவட்டம் புளியங்குடி உள்ள அரசு உதவி பெரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆண் - பெண் என சுமார்  இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.  இப்பள்ளியில் பாட நேரம் முடிந்த பிறகு, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இரவு நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுள்ளது. அப்போது பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாவணவர்கள் சிறப்பு வகுப்பில் இருந்துள்ளனர். இதில் ஒரு மாணவனை மட்டும், வகுப்பாசிரியர் பிரான்சிஸ் என்பவர் தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். 

இதனையடுத்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். அப்போது பிரான்சிஸ் மீது நடக்கவடிக்கை எடுப்பதாகவும், தற்போது நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

 இதனிடையே இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரிடம் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பிரச்னையின் வீரியத்தை புரிந்துக்கொண்ட பெற்றோர்கள், புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் புளியங்குடி காவல்துறையினர் ஆசிரியர் பிரின்ஸ் என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் பிரின்ஸ் என்பவர் சிறப்பு வகுப்பிற்கு வரும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இதுபோன்ற பாலியல் சீண்டலில்  ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவனை ஆசிரியர் ஒருவர்  பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow