Baba Siddique : முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த துயரம்... மும்பையில் அதிர்ச்சி!

Baba Siddique Shot Dead in Mumbai : மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும் மாநில தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான பாபா சித்திக் நேற்று (அக். 12) இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Oct 13, 2024 - 12:34
Oct 13, 2024 - 23:30
 0
Baba Siddique : முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த துயரம்... மும்பையில் அதிர்ச்சி!
senior nationalist congress leader baba siddiqui was shot dead by assailants

Baba Siddique Shot Dead in Mumbai : இந்தியாவில் அண்மைக் காலமாகவே அதிகளவில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும் மாநில தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான பாபா சித்திக் நேற்று (அக். 12) இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பாபா சித்திக்(Baba Siddique). இவர் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சராகப் பதவி வகித்தவர். மும்பை நிர்மல் நகர் பகுதியில் அவரது மகனின் அலுவலகம் இருக்கிறது. நேற்று தனது மகனின் அலுவலகத்துக்கு சென்ற அவர் இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த அவரது காரில் ஏறி அமர்ந்ந்துள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர், அவரது காரைச் சுற்றி பட்டாசுகள் கொளுத்தியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த சித்திக் சற்று பதற்றமடைந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்களில் சிலர், சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்பு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் மார்பு பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயமடைந்தார் சித்திக். மயங்கி சரிந்த சித்திக்கை அப்பகுதியினர் உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சித்திக்(Baba Siddique Death) பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் தப்பிச்சென்ற குற்றவாளிகளில் இருவர் காவல்துறையினர் பிடியில் சிக்கினர். அதில் ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் அரியானாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியின் பிரபுல் படேல் “பாபா சித்திக்(Baba Siddique Murder) கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த குற்றச் செயலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை தரப்பட வேண்டும். அவர்களை விட்டு விடக்கூடாது. இந்த கடினமான சூழலில் பாபா சித்திக் குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow