மருத்துவர்களின் பாதுகாப்பு நம்முடைய கடமை.. அரசு அரணாக திகழும் - துணை முதல்வர்

இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Nov 14, 2024 - 04:37
 0
மருத்துவர்களின் பாதுகாப்பு நம்முடைய கடமை.. அரசு அரணாக  திகழும் - துணை முதல்வர்
மருத்துவர்களின் பாதுகாப்பு நம்முடைய கடமை.. அரசு அரணாக திகழும் - துணை முதல்வர்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் இன்று நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். 

உடனடியாக மருத்துவர் பாலாஜியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விரிவாண விசாரணை நடந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

முதல்வரின் உத்தரவின் பேரில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சம்பவம் இடத்திற்கு சென்று கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜி மீது, அங்கு சிகிச்சைபெற்ற ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் கொடூர முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்க முடியாது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்பேரில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்து, அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

மருத்துவர் பாலாஜி அவர்கள் பூரண குணமடைய முதலமைச்சர் தலைமையிலான அரசு அவருக்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும். அவர் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அங்கு சிகிச்சை செல்வோர் முழு ஒத்துழைப்பு வழங்குவதும் - அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும்,  இரவு - பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow