“இன்டர்நெட் கேபிள் திருடா! “எங்கள் திருடர் குல திலகமே””... வைரல் போஸ்டரால் மிரண்ட நெட்டிசன்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பி.எஸ்.என்.எல்., பைபர் கேபிளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி வரும் நிலையில், திருடனை வாழ்த்திய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nov 14, 2024 - 04:50
 0
“இன்டர்நெட் கேபிள் திருடா! “எங்கள் திருடர் குல திலகமே””... வைரல் போஸ்டரால் மிரண்ட நெட்டிசன்கள்!
“இன்டர்நெட் கேபிள் திருடா! “எங்கள் திருடர் குல திலகமே””... வைரல் போஸ்டரால் மிரண்ட நெட்டிசன்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து அதிவேக எப்.டி.டி.எச்., இணைப்புகள் மூலம் ஆல்பா என்ற தனியார் ஏஜென்சி நகர்ப்புற மற்றும் ஊர்ப்புறங்களில் வீடுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேசன், வங்கிகள் மற்றும் இன்டர்நெட் சென்டர், இசேவை மையங்கள், இதர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வழங்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இணையதள சேவையை பி.எஸ்.என்.எல்., பைபர் கேபிள் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பைபர் கேபிள்களை மர்ம நபர்கள் சிலர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திலிருந்து காமராஜர் சிலை பஸ் ஸ்டாப் வரை கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த 5 மாதங்களில் 99 தடவை இரவு நேரங்களில் திருடியுள்ளனர். இதனால், இண்டர் நேட் சேவை பெரிதளவில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால், ஆலங்குடி பேரூராட்சிக்குபட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திருடர்கள் மிகவும் சாதூரியமாக செயல்பட்டுள்ளனர். இதனால், செய்வதறியாது திகைத்த தனியார் நிர்வாகத்தினர் சமூக வலைதளத்தில் திரைப்பட நடிகர் வடிவேலுவின் புகைப்படத்துடன் ஒரு போஸ்டரை உலா விட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில், “வாழ்த்துகிறோம்... இன்டர்நெட் கேபிள் திருடா! 

ஆலங்குடிக்கு டப்கொடுக்கும் “எங்கள் ஆருயிர் திருடனே”... சிசிடிவி-க்கே தண்ணி காட்டும் “எங்கள் திருடர் குல திலகமே” 

அண்ணன் ஸ்டைல் ஸ்பிளண்டர் பாண்டி அவர்களது 300வது திருட்டு விழா வெற்றி பெறவும், கடந்த 5 வருடங்களில் இல்லாததை இந்த 5 மாதங்களில் திருடி அசத்தி காட்டிய எங்கள் திருடனே...!

100-வது பைபர் கேபிள் திருட்டு சாதனை விழாவை வாழ்த்த முடியாததால், கேபிள் பாக்ஸ் மட்டும் இல்லாமல் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தையே கொள்ளையடிக்கவும்.

மேலும், உங்கள் திருட்டு தொழிலை இரவில் மட்டும் இல்லாமல் பகலிலும் கூட்டாளிகளோடு திருடி பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்து துரிதமாக 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாட மனமார வாழ்த்துகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் திருடர்களின் முகங்களுடன் கூடிய போஸ்டரும் வெளியிடப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த போஸ்டரை ஷேர் செய்து தங்களது கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow