கோடிக்கணக்கில் கொள்ளை.. சுகபோக வாழ்க்கை.. எச்.ஐ.வி. நோய்.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு பள்ளியில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Sep 4, 2024 - 20:03
Sep 4, 2024 - 20:08
 0
கோடிக்கணக்கில் கொள்ளை.. சுகபோக வாழ்க்கை.. எச்.ஐ.வி. நோய்.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?
நகைக் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய கொள்ளையன்

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது யூனியன் கிறிஸ்டியன் பப்ளிக் பள்ளி. இந்த பள்ளியில் கடந்த மாதம் 24ஆம் தேதி நிர்வாக அலுவலகம், பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் கதவுகளை உடைத்து விலை உயர்ந்த லேப்டாப், செல்போன்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசில் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ரகுபதி தலைமையிலான தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் முகமூடி அணிந்து கொள்ளையில் கொள்ளையன் ஈடுபட்டது தெரிய வந்தது. அதுதொடர்பான தடயங்களை சேகரித்த பிறகு இந்த கொள்ளையில் ஈடுபட்டது பழைய குற்றவாளியான மார்க்கெட் சுரேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடியதில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் மார்க்கெட் சுரேஷ் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

அங்கு சென்று தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான மார்க்கெட் சுரேஷ் சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர். இவர் மீது சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 36 கொள்ளை வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 

சென்னை காவல்துறைக்கு நன்கு தெரிந்த முகம் தான் இந்த கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ். ஏனென்றால் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர் வீடுகளில் சுலபமாக கைவரிசை காட்டி போலீசில் சிக்கி கொள்வதால், சென்னை காவல்துறை இவரை அடிக்கடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் நகைகக்கடை அதிபர் வீட்டில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மூளையாக செயல்பட்டு கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் தான் இந்த மார்க்கெட் சுரேஷ். இதே போல சென்னையில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி இவர் சிறைக்கு சென்று வந்துள்ளார். 

திருட்டு வழக்கு ஒன்றில் மார்க்கெட் சுரேஷ் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். பொதுவாக கொள்ளை சம்பவத்தில் கிடைத்த பணம், நகைகளை ஆந்திராவிற்கு கொண்டு சென்று சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதில் மார்க்கெட் சுரேஷிற்கு அலாதி பிரியம். இதனால் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் தான் சிறையில் இருந்து மார்க்கெட் சுரேஷ் வெளியே வந்துள்ளார். கையில் பணம் இல்லை என்பதால் கீழ்ப்பாக்கம் பள்ளியில் தன்னுடைய கைவரிசையை காட்டிய மார்க்கெட் சுரேஷ், தற்போது போலீசாரிடம் வசமாக சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். 

கைதான அவரிடம் இருந்த கொள்ளையடித்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோடிக்கணக்கிலான தங்கத்தை கொள்ளையடித்து பிரபலமான தான் சிறிய கொள்ளை சம்பவத்தில் சிக்கி கொண்டதாகவும், உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டதால் பெரிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடியவில்லை என கண்ணீர் விட்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow