SCO Summit 2024 : பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம்

S Jai Shankar About SCO Summit 2024 : பாகிஸ்தான் உடனான நேரடி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Oct 5, 2024 - 20:22
Oct 5, 2024 - 22:35
 0

S Jai Shankar About SCO Summit 2024 : இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 15,16ம் தேதிகளில் பாகிஸ்தான் செல்கிறார். SCO கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய தூதுக்குழுவை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2015ம் ஆண்டுக்குப்பின் 10 ஆண்டுகளில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உடனான நேரடி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow