திருமண ஆசையால் ரூ.15 லட்சத்தை இழந்த பெண் போலீஸ்.. ஜிம் பயிற்சியாளருக்கு வலை வீச்சு
Gym Trainer Fraud Case : முன்னாள் பெண் போலீஸை திருமணம் செய்துகொண்டு, 15 லட்ச ரூபாயை ஏமாற்றியதாக ஜிம் பயிற்சியாளர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Gym Trainer Fraud Case : சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் 22வது தெருவைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர், ஆணழகன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், ஜிம் பயிற்சியாளராகவும் இன்ஸ்டா பிரபலமாகவும் உள்ளார். போலீசில் பணியாற்றி வந்த சுந்தவள்ளி என்பவரும், திலீப் குமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுந்தவள்ளியுடன் தொடர்பை அவர் துண்டித்து கொண்டதாக தெரிகிறது.
கடந்த செப்டம்பார் மாதம் 11ஆம் தேதி இரவு சுந்தரவள்ளி, திலீப்குமாரி வீட்டிற்கு மதுபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு திலீப் குமார் இல்லாததால், அவரது தாயார் அமலுவிடம் மதுபோதையில், "உங்கள் மகனால் வாழ்க்கையில் ஏமாந்து விட்டேன், என் வாழ்க்கை அழிந்து விட்டது" என்று கூறி அமலுவை தாக்கியதாக தெரிகிறது.
இந்த தகராறு தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோந்து போலீஸார் தேவேந்திரன், சிவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற தகராறை விலக்கி விட்டனர். அப்போது மதுபோதையில் இருந்த சுந்தரவள்ளி விசாரணைக்கு வந்த 2 போலீஸாரையும் மீது சட்டை பிடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் காயமடைந்த அமலு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுந்தரவள்ளி 39 வயதாகிறது. பெண் காவலரான அவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு நடத்த சென்ற போலீசாரை தாக்கியதாக சுந்தரவள்ளியை போலீசார் கடந்த மாதம் 13 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீனில் சுந்தவள்ளி வெளியே வந்தார். இதற்கிடையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் திலீப் குமார் மீது புகார் அளித்தார்.
அதில், திலீப் குமார் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்ய பணம் தேவை என்று கூறி ரூ. 15 லட்சத்தை அவர் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சுந்தவள்ளி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி திலீப் குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் நுங்கம்பாக்கம் போலீசார் திலீப் குமார் மீது வழக்கை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து திலீப் குமார் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?