சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 11, 2024 - 17:29
Sep 11, 2024 - 17:48
 0
சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்
சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் நியமனம்?

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான, ஐபிஎல்-இலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேட்பனாக தொடர்ந்து நீடித்துவரும் தோனி, 2010, 2011, 2014, 2018, 2021 மற்றும் 2023 என 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடர் முழுவதும், தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்தினார். பிளே ஆஃப் சுற்றோடு சி.எஸ்.கே. வெளியேறினாலும் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் மைதானத்தில் குவிந்தனர். சென்னை மட்டுமல்லாது, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு என எந்த மைதானமாக இருந்தாலும் மஞ்சள் ஜெர்சியே கோலோச்சியது.

2014 சீசனில் இம்பேக்ட் வீரராக தோனி களமிறங்கினாலும், அவருக்கு கோப்பையுடன் பிரியா விடை கொடுக்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் அடுத்த சீசனில் பார்த்துக் கொள்ளலாம் என பொறுமையோடு காத்திருந்தனர். ஆனால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் 5 ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது.

இதனால், 5 ஆண்டுகளான வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதி ஊதியத்தை குறைத்துக் கொள்ளும் விதி அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன்படி தோனியை இம்பேக்ட் வீரராக எடுத்துக் கொள்ள சென்னை அணி பிசிசிஐயை நாடியது. இதற்கு பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ‘மேஜர் மிஸ்ஸிங்’ என்ற கேப்ஷனோடு வெளியிட்ட புகைப்படத்தில் ‘விசில்’, மஞ்சள் ‘ஜெர்ஸி’, தோனி ‘7’ எண் அடங்கிய டிஷர்ட் அனைத்தையும் குறிப்பிட்டு தோனியின் புகைப்படம் இல்லாமல் வெளியிட்டது. இதனால், ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியிலிருந்து தோனி ஓய்வுபெற உள்ளதாக கூறப்படுவதை அடுத்து, ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து, ரிக்கி பாண்டிங் விலகிய பிறகு, அணி உரிமையாளருடன் சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால், ரிக்கி பாண்டிங்கிற்கும், ரிஷப் பண்டிற்கும் சரியான புரிதல் இருந்துவந்த நிலையில், அவரை பொறுப்பில் இருந்து நீக்கியதை பண்ட் விரும்பவில்லை என்றும் தெரிகிறது.

அவ்வாறு ஒருவேளை ரிஷப் பண்ட் சென்னை அணிக்கு திரும்பினால், விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாது, தோனி வகித்த கேப்டன் பொறுப்பும் அவரிடம் ஒப்படைப்பதற்கு அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், டெல்லி அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகும் ரிஷப் பண்ட், நிச்சயம் கேப்டன் பொறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டார்.

மேலும், கடந்த ஐபிஎல் 2024 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டின் செயல்பாடுகள் அணி நிர்வாகத்தை திருப்திபடுத்தவில்லை. ஏனெனில் இதுவரை மூன்று முறை மட்டுமே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றோடு வெளியேறி உள்ளது. அதில், கடந்த சீசனும் அடங்கும். சென்னை அணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள போஸ்ட்டால் குழம்பி போயுள்ள சி.எஸ்.கே. ரசிகர்கள், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow