ஒழுங்குமுறை விற்பனை கூடம்... பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து பயிருக்கு முறையான விலை நிர்ணயம் செய்யாத விற்பனை கூட நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Feb 7, 2025 - 21:51
Feb 7, 2025 - 21:59
 0
ஒழுங்குமுறை விற்பனை கூடம்... பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில்
ஒழுங்குமுறை விற்பனை கூடம்... பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில்

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டத்துக்குட்பட்ட 47 கிராமத்திலிருந்து கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளைவிக்கும் உளுந்து, மணிலா, நெல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நண்பகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விளைந்த உளுந்து பயிரை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆனால் பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் உளுந்து பயிருக்கு முறையான விலையை நிர்ணயம் செய்யாமல் 100 கிலோ மூட்டைக்கு 2700 ரூபாய், 3000 ரூபாய், 4000 ரூபாய் என விலையை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளனர். 

பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகள் தங்களது உளுந்து பயிருக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் முறையான விலையை நிர்ணயம் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே திருவண்ணாமலை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

குறிப்பாக விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை நிர்ணயம் முறையாக செய்வதில்லை எனவும், ஆனால் வியாபாரிகள் வந்தால் மட்டும் விலையை நிர்ணயம் செய்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதனை தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow