சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் ஆசை வார்த்தை கூறி அத்துமீறல் கோவையில் நடந்த கொடுமை!
யில் சிறுமியை ஆட்டோ டிரைவர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை சேரன் நகர் பகுதி சேர்ந்தவர் 21 வயதான தௌஃபிக் உமர். ஆட்டோ டிரைவராக இருக்கும் இவர், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளை தனது ஆட்டோவில் தினமும் அழைத்து சென்று வந்துள்ளார். இந்த ஆட்டோவில் 15 வயது சிறுமியும் தினமும் வந்து சென்றுள்ளார். இந்நிலையில், அந்த சிறுமி மீது மோகம் கொண்ட ஆட்டோ டிரைவர், சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி மெல்ல மெல்ல தன் காதல் வலையில் விழ வைத்துள்ளான்.
ஆட்டோ டிரைவரின் காதல் வலையில் சிக்கிய சிறுமியை, அவர் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமும் அடைந்துள்ளார். இதுகுறித்து அறிந்துக்கொண்டதௌஃபிக் உமர் சிறுமியின் வீட்டில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அந்த கருவை கலைக்க முயன்றுள்ளார். இதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில் நர்சிங் படித்து பாதியில் படிப்பை நிறுத்திய தன்னுடைய தோழியை தொடர்புக்கொண்டு இதுகுறித்து கேட்டதாக தெரிகிறது.
அவர் கூறிய தகவலை வைத்து, கருகலைப்பு மாத்திரையை வாங்கி வந்து சிறுமியிடம் கொடுத்து கருக்கலைப்பும் செய்ய வைத்துள்ளார் தௌபிக் உமர். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கரு கலைப்பு செய்யப்பட்ட சிறுமி வீட்டில் உடல் சோர்ந்த நிலையில் இருந்ததைப் பார்த்த அவரது பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூற, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காரமடை காவல் நிலையத்தில் தௌபிக் உமர் மீது புகார் அளித்துள்ளனர். பின்னர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, தௌபிக் உமரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் கருக்கலைப்பு செய்ய மாத்திரை பெயரை கூறிய தௌபிக் உமரின் தோழியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோ டிரைவர் மோசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?