காரை ஏற்றி கொலை முயற்சி.. நூழிலையில் உயிர் தப்பிய சிசிடிவி வெளியாகி பரபரப்பு

தொழில் போட்டி காரணமாக துணிக் கடைக்காரரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

Nov 5, 2024 - 04:31
 0
காரை ஏற்றி கொலை முயற்சி.. நூழிலையில் உயிர் தப்பிய சிசிடிவி வெளியாகி பரபரப்பு
காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரருக்கு போலீஸ் வலை

சென்னை வேளச்சேரி 5வது பிரதான சாலையில் ஜெபஸ்டின், என்பவர் ரீஸ்டோர்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு எதிரே லிங்கா கிளாத்திங் என்ற பெயரில் சிவகுமார் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் காரை இயக்கி வந்த சிவகுமார், காரை கடையின் முன்பு நிறுத்திவிட்டு, கடையின் உரிமையாளர் ஜெபஸ்டினிடம் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அத்தோடு காரை ஜெபஸ்டின் மீது இடிக்க முயன்றுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட ஜெபஸ்டின் சற்று விலகி, தன்னை தற்காத்துக் கொண்டார். பின்னர் வேகமாக காரை இயக்கி கடைக்குள் நுழைந்தார். அப்போது நூலிழையில் கடையில் வேலை பார்க்கும் இஸ்மத் என்பவர் ஓடி தப்பித்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டு சிவகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் கடையில் இருந்த கண்ணாடிகள் சேதமடைந்தது. துணிகள் எல்லாம் கலைந்து கீழே சிதறியது.

இது குறித்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் நிகழ்விடம் வந்து விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொழில் போட்டி காரணமாக காரை இயக்கி துணிக்கடைகாரரை கொல்ல முயன்ற நபரை தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow