தமிழ்நாடு

ஊருக்குள் புகுந்த மான்.. பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

பெரம்பலூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஊருக்குள் புகுந்த மான்.. பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!
ஊருக்குள் புகுந்த மான்.. பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

பெரம்பலூரை அடுத்த தம்பிரான்பட்டி  கிராமத்தில் இன்று மாலை சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று எதிர்பாராத விதமாக ஊருக்குள் புகுந்தது. 

இதனை கண்ட நாய்கள் துரத்த தொடங்கியதால் ஊருக்குள் உள்ள ஒரு கோவிலின் அருகில் பதுங்க பார்த்த போது ஊர் பொதுமக்கள் பத்திரமாக மானை பிடித்து பாதுகாத்தனர். 

மான் ஓடி வந்தபோது கீழே விழுந்ததில் சில இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை பத்திரமாக மீட்டு பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காயங்களுக்கு சிகிச்சை அளித்து பின்னர்‌ பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.

திடீரென‌ ஊருக்குள் புகுந்த மானால் தம்பிரான்பட்டி கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.