பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல்.. எண்ணெய் சந்தைகள் நிலைமை என்ன.. ரஷிய அதிபரும் சவுதி இளவரசரும் ஆலோசனை..!
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், எண்ணெய் சந்தைகள் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனம், இஸ்ரேல் போர் கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கியது. இந்த போரில் முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஓராண்டாக நடந்து வரும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வபோது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
பாலஸ்தீன-இஸ்ரேல் அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்கள், தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்துவரும் முயற்சிகளில் இருந்து விலகுவதாக கத்தார் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலினால் உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமை குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் பேசியதாக கிரெம்ளின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலக எண்ணெய் சந்தையின் நிலைமை குறித்த பேச்சுவார்த்தை சவூதி அரேபியா தரப்பில் முதலில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. "நட்பு மற்றும் பரஸ்பர நன்மை" உள்ளிட்ட இருநாட்டு உறவுகளை பாராட்டினர் மற்றும் அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான துறைகளில் விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர். மேலும், இருநாட்டு தலைவர்களும், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிரச்சினைகள், பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய குடியேற்றம், அதற்கு காரணமான சாத்தியமான தீர்வு குறித்தும், தங்கள் நிலைப்பாட்டை கூறியுள்ளனர்.
மேலும், “OPEC Plus-ல் உள்ள நெருக்கமான ஒருங்கிணைப்பைத் தொடர்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதாகவும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் சமநிலையை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?