“7 கோடிப்பே... 7 கோடி” ஹர்த்திக் பாண்டியா வாட்ச்... ஷ்பெஷல் எடிசன்... செம காஸ்ட்லி..!
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டியில், ஹர்த்திக் பாண்டியா கட்டியிருந்த காஸ்ட்லி வாட்ச் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் குவிக்க, அடுத்து களமிறங்கிய இந்திய அணி மிக எளிதாக வெற்றிப் பெற்றது. இந்திய அணியின் விராட் கோலி சதம் அடித்து அசத்தியிருந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், இது அவருக்கு 51வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை புரிந்தது ஒருபுறம் சிலாகிக்கப்பட்டாலும், இந்த போட்டியின் போது ஹர்த்திக் பாண்டியா கட்டியிருந்த கைக்கடிகாரம் தான் இப்போது ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் மிக முக்கியமானவர் ஹர்த்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார். முதலில் பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்திய ஹர்த்திக் பாண்டியா, கைகள் இரண்டையும் உயர்த்தி செம க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்தார். அப்போது அவர் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்த ரசிகர்கள், “என்னய்யா இது திருவிழா கடைல வாங்குன வாட்ச் மாதிரி ஆரஞ்சு கலர்ல இருக்குதே” என கிண்டல் செய்து வந்தனர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த வாட்ச் சமூக வலைதளங்களில் வைரலாக, கிண்டல் செய்த ரசிகர்கள் எல்லாம் அப்படியே வாயடைட்து போய்விட்டனர். ஆம்... ரிச்சர்ட் மில்லே RM 27-02 பிராண்ட் வாட்ச் ஆன அதன் மதிப்பு 8 லட்சம் அமெரிக்க டாலராம். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. முதலில் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த வாட்ச், கார்பன் TPT யூனிபாடி பேஸ்பிளேட்டுக்கு பெயர் பெற்றது, அதேபோல், இந்த வாட்ச்சின் டையல் வடிவமைப்பானது, 5 டைட்டானியம் அடுக்கு பாலங்களுடன், கார் ரேஸ் ட்ராக்கை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக வாட்ச்சின் உட்பகுதி எப்படி இயங்குகிறது என்பது எலும்புக்கூடு மாதிரி மிகத் துல்லியமாக தெரியும் வகையில் உள்ளது. மேலும், பிளாக் & ஒயிட் கலரில், TPT குவார்ட்ஸ் உடன் செம கிளாஸ்ஸியான லுக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. டெக்னிக்கலாக மிரட்டும் இந்த வாட்ச், இதுவரை 50 மட்டுமே தயாரிக்கப்பட்ட ஒரு லிமிட்டடு எடிஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 கோடி ரூபாய்க்கு வாங்கிய இப்படியொரு ஸ்பெஷல் எடிசன் வாட்ச்-ஐ கட்டிக் கொண்டுதான் ஹர்த்திக் பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடினார் என்பது தெரிந்து பலரும் வாயடைத்து போய்விட்டனர். வாட்ச் பிரியரான ஹர்த்திக் பாண்டியாவிடம், ஏற்கனவே இதுபோல ஸ்பெஷல் எடிசன் வாட்ச்கள் சில உள்ளன. அவைகளும் பல கோடிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஹர்த்திக் பாண்டியாவின் 7 கோடி ரூபாய் கைக்கடிகாரத்தை போலவே, அவரது புதிய காதலியாக கூறப்படும் ஜாஸ்மின் வாலியா, இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண நேரில் வந்ததும், அதிலும் இந்தியா வெற்றி பெற்றதும் பார்வையாளர் மாடத்தில் இருந்து ஜாஸ்மின் பறக்கும் முத்தம் கொடுத்ததும் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
What's Your Reaction?






