Lord Murugan Conference 2024 : ‘இப்ப தான் சந்தோஷமாக இருக்கிறது’.. திமுகவை சீண்டும் பாஜக பிரமுகர்

Lord Murugan Conference 2024 : கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று முருகப் பெருமானின் மாநாட்டை நடத்துவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Aug 25, 2024 - 13:30
Aug 25, 2024 - 16:07
 0
Lord Murugan Conference 2024 : ‘இப்ப தான் சந்தோஷமாக இருக்கிறது’.. திமுகவை சீண்டும் பாஜக பிரமுகர்
BJP Narayana Tirupathi About Lord Murugan Conference 2024

Lord Murugan Conference 2024 : சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுலவகத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த அரசாங்கம் மருத்துவமனை உடைய தலைமை மருத்துவர் அவரை விலகச் சொல்லிவிட்டு வேறு அலுவலரை சிறப்பு அதிகாரியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

எதற்காக அதை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியிருக்கிறது. முதல் தகவல் அறிக்கை போடவில்லை 14 மணி நேரம் கழித்து போடப்படுகிறது. காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிசிடிவி பார்த்து ஒருவரை கைது செய்கிறார்கள். நீதிமன்றம் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறது. அதுவரையிலும் அமைதியாக இருந்த மம்தா திடீரென்று நீதி கேட்டு பயணம் செய்கிறேன் என்று செல்கிறார். இது குறித்து ராகுல் காந்தி இடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பும்போது, ’எனது கவனத்தை திரும்பாதீர்கள் எனக் கூறுகிறார்’. இது ஏற்புடையதா?.

தமிழகத்தில் காவல்துறை விசாரணையில் இருந்த கைதி எலி மருந்து சாப்பிட்டு இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். அவரது தந்தையும் இறந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இது முரணாக உள்ளது. தற்போது அந்தப் பள்ளியை திறக்க சொல்லி அழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி நடத்துவதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது பள்ளி நடத்தக்கூடிய அறக்கட்டளை தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிந்துபாத் கதையை விட நீளமாக செல்கிறது. இதற்குதான் நாங்கள் சிபிஐ விசாரணை கூறினோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களை கைது செய்கிறார்கள். இந்த கொலை நடந்தபோது செல்வப்பெருந்தகை வேகமாக பேசினார். தற்பொழுது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. காங்கிரஸ் சேர்ந்த ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

இந்த அரசு முருகன் மாநாடு நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. கடவுள் இல்லை, கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று முருகப் பெருமானின் மாநாட்டை நடத்துவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இது ஆன்மீக நோக்கமா? ஓட்டு வங்கிக்கான நோக்கமா? என்ற கேள்வி தான் இருக்கிறது.

முதலமைச்சர் அமெரிக்கா செல்வது பிரச்சனை அல்ல; உடல் நலத்தை பார்ப்பதற்கு செல்வது சரிதான். ஆனால் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செல்கிறேன் என கூறுவது ஏற்படுவது அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு முதலீடு எவ்வளவு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிக்கையாக கொடுக்க வேண்டும். இரண்டாவது இடத்திலிருந்து தமிழகம் எட்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறது.

காவல்துறை கண்காணிப்பில் இருப்பவர் உயிரிழந்ததை பற்றி எனக்கு கவலை இல்லை. அவர் எந்த கட்சியில் சேர்ந்தவரும் என்பது கவலை இல்லை. ஒரு பொய்யான என்.சி.சி. கேம்பை நடத்தி அதனால் மாணவர்களை இதுபோன்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்வதற்காக நடந்த விஷயம் என்பதால் இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow