FIR லீக் ஆனது எப்படி..? - சென்னை கமிஷனர் அருண் விளக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Dec 26, 2024 - 21:41
 0
FIR லீக் ஆனது எப்படி..? - சென்னை கமிஷனர் அருண் விளக்கம்
FIR லீக் ஆனது எப்படி..? - சென்னை கமிஷனர் அருண் விளக்கம்

பாதிக்கப்பட்டவர்கள், என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர். இந்த வழக்கிலும் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை வெப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியும் பேராசிரியரும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்கின்றன அந்த தகவல் அறிக்கை என்பது பாதிக்கப்பட்ட நபர் அளிக்கக்கூடிய தரவுகள் அனைத்தும் அடங்கியதாக இருக்க வேண்டும். 

புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டி இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 25ஆம் தேதி காலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்ட ஞானசேகர் இடம் விசாரணைகள் மேற்கொண்டு பின்னர் பாலியல் வழக்கு தொடர்பான குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்ததற் பின்னர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தோம். 

இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையானது வெளியில் வரக்கூடாது அப்படி வெளியில் வந்தால் அது சட்டப்படி குற்றமாகும். அதேபோல் அப்படி வெளியாகிய முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விவாதிப்பதும் சட்டப்படி குற்றமாகும். அதன்படி முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட நபர்களை கண்டறிய கோர்ட்டுடன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளோம். 

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகர் மீது 2013 முதல் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஞானசேகர் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரியவந்துள்ளது. 

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளின் தகவல்களை வெளியிடக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. 20 வழக்குகளில் ரவுடித்தனம் மற்றும் இது போன்ற பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்குகள் எதுவும் அவர் மீது பதியப்படவில்லை.

ஞானசேகர் மீது பதியப்பட்டுள்ள இருபது வழக்குகளில் 6 வழக்குகள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் மீதமுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு பொறுத்தவரையில் ஞானசேகர் இடம் வேற எந்த ஒரு பெண்களும் பாதிப்படைந்ததாக காவல் நிலையத்தில் இதுவரை புகார் எதுவும் வரவில்லை. 

மாறாக ஞானசேகர் இடம் மேற்கொள்ள உள்ள விசாரணையில் அவரது அலைபேசிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அப்படி பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் அவர்களிடம் புகார் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பாலியல் வழக்கு தொடர்பாக ஞானசேகர் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரியவந்துள்ளது. இந்த பாலியல் வழக்கு மட்டுமின்றி எந்த ஒரு வழக்காக இருந்தாலும் காவல்துறை நடுநிலையாக செயல்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் பதவிப்பிரமாணம் இருக்கும்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும் காவல்துறைக்கு இது போன்ற வழக்குகளை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதனை பிறர் வேண்டுமானால் செய்யலாம். 

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய வகைகளில் போராட்டங்களை ஒருபொழுதும் காவல்துறை அனுமதிக்காது. அண்ணா பல்கலைக்கழகத்தை பொருத்தவரையில் 70 சிசிடிவி கேமராக்களும் டெக்ஸ் கோ என்று அழைக்கக்கூடிய அமைப்பில் எக்ஸ் சர்வீஸ் மேன் 140 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தை பொருத்தவரையில் பல்கலைக்கழக நுழைவு வாயில்கள் தவிர்த்து வேறு ஏதாவது வழிகளில் பொதுமக்கள் வர வாய்ப்புள்ளதா என்கின்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது அப்படி வருகை புரிபவர்களில் சந்தேகப்படும் பட்சத்தில் அவரிடமும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டிகள் விசாரணை மேற்கொள்கிறார்கள். 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக ஞானசேகர் மீது ஏற்கனவே நான்கு பிரிவுகளில் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் அவர் மீது கூடுதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்ட ஞானசேகர் மீது 2019க்கு பிறகு எந்த வித வழக்குகளும் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறை மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் நடைபெற்ற மறுநாள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் அந்த அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக காவல்துறை தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

குற்றவாளிகள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் காவல்துறை அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow