திமுக ஆட்சி ரவுடிகளின் ராஜ்ஜியமாக தான் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!
திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரவுடிகளின் ராஜியமாக தான் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரவுடிகளின் ராஜியமாக தான் உள்ளது என்று குற்றம் சாட்டிய தமிழிசை சவுந்தரராஜன், எஃப்.ஐ.ஆர் யாரைக் காப்பாற்ற வெளியிடப்பட்டது, ஏற்கனவே அந்த பெண் பாதிக்கபட்டுள்ளார், மேலும் அடையாளத்தை கூறி இருப்பது அந்தப் பெண்ணின் வருங்காலம் எங்கு உள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பாக இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்து பாஜகவினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் கூற வேண்டும். கல்லூரி வளாகத்தில் மட்டும் அல்ல பள்ளிகளில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட சம்பவம் கல்லூரியில் பள்ளிகளில் பணியிடங்களில் கூட நடைபெறுகிறது.
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு, தமிழக அரசிடம் இருக்கிறது கோளாறு, நீங்கள் வெளியேறு என்று அடுக்கு மொழி வசனங்களை பேசி
முதல் தகவல் அறிக்கையை (FIR copy) வெளியிட்டது கண்டனத்திற்குறியது. முதல் தகவல் அறிக்கையில் பெண்ணின் புகைப்படம் உட்பட எந்த தகவலும் வெளியிடக் கூடாது என்ற சட்டம் உள்ளது இதனை வெளியிட்டது நீதிமன்ற அவமதிப்பாகும்.
ஏற்கனவே அந்த பெண் பாதிக்கபட்டுள்ள நிலையில், மேலும் அடையாளத்தை கூறி இருப்பது அந்தப் பெண்ணின் வருங்காலம் எங்கு உள்ளது. FIR copy வெளியிடப்பட்டது யாரைக் காப்பாற்ற வெளியிடப்பட்டது என தமிழிசை எனக் கேள்வி எழுப்பினார்..?
பிரியாணி கடையிலிருந்து பிக்னிக் செல்வது போல் உள்ளே சென்று விளையாடுவாராம்.. என்ன நடந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில், கண்டவன் எல்லாம் விளையாடுவதற்கு தான் தமிழகத்தில் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்களா..? என்று தொடர்ந்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
திமுக மவுனம் சாதிப்பதில் எந்த பயனும் இல்லை நிச்சயமாக பதில் கூற வேண்டும் என்று கூறினார். எதிர்க்கட்சியில் திமுக இருக்கும்பொழுது விடியல் பிறக்கும் விடியல் பிறக்கும் என கூறினார்கள். ஆனால், தற்பொழுது பெண்களுக்கு விடிவு காலமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றவாளிகள் செய்யும் குற்றச்சாட்டிற்கு அரசு துணை நின்று அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரௌடிகளின் ராஜியமாக தான் உள்ளது. 15 வழக்கு உள்ள குற்றவாளி யாரின் பின்புலத்தில் வெளியே நடமாடிக் கொண்டிருக்கிறார்.
வீடியோ எடுத்து அந்த பெண்ணை பயமுறுத்துவது தற்பொழுது உள்ள தலைமுறையின் அச்சுறுத்தலை காட்டுகிறது எனக் கூறினார்.
What's Your Reaction?