Vaazhai OTT Release Date: மாரி செல்வராஜ்ஜின் பயோபிக் மூவி... ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான வாழை!
Vaazhai OTT Release Date : மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
Vaazhai OTT Release Date : பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த மாரி செல்வராஜ், அடுத்து கர்ணன், மாமன்னன் படங்களையும் இயக்கினார். அதன் தொடர்ச்சியாக மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி ரிலீஸானது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், மாரி செல்வராஜ்ஜின் பயோபிக்காக வெளியானது. அதாவது தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வாழை படமாக இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ்.
வாழை திரைப்படம் வெளியாகும் முன்பே பிரபலங்களில் பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இயக்குநர்கள் வெற்றிமாறன், மணிரத்னம், பா ரஞ்சித், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தை பாராட்டி பேசியிருந்தனர். இதனால் வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அனைத்துத்தரப்பு ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். அதேநேரம் எழுத்தாளர் சாரு நிவேதிதா உட்பட ஒருசிலர் வாழை படம் குறித்து மிக மோசமாக விமர்சித்திருந்தனர்.
அதேபோல், வாழை படத்தின் கதை, தன்னுடைய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் சோ தர்மன் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடி வரும் வாழை திரைப்படம், இப்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. முன்னதாக இந்தப் படம் செப்டம்பர் இறுதிக்குள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான அப்டேட்படி, வாழை திரைப்படம் அக்டோபர் 11ம் தேதி முதல், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
அதேபோல், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி போன்ற மொழிகளிலும் வாழை திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனால் வாழை படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முதலில் வாழை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் தனது பயோபிக் மூவி என்பதால், வாழை படத்தை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
5 முதல் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான வாழை திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் வாழை படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?